பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. நாட்டு நிலை 155

‘ ஆசுமுதல் காற்கவியும் அட்டாவ தானமும் சீர்ப்

பேசுமியல் பல்காப் பியத்தொகையும்-ஒசை எழுத்துமுத லாமைக் திலக்கணமும் தோய்ந்து பழுத்த தமிழ்ப்புலமை பாலித்து (கந்தர் கலிவெண்பா.) என்று குமாகுருபா சுவாமிகள் இக்குருபானிடம் புலமை யை வேண்டியிருக்கும் நிலைமையை யறிக. இவ்வாறு கலைகளி’ அலும் கவிகளிலும் தலைமைபெற்று ஞானநாயகனய் இவர் கிலவி நிற்றலால் புலவர் கோமான் எனப் புலமையுலகம் இவரை உரிமை யுடன் உவந்து போற்றி வருகின்றது. * -

புலமையின் நிலைமையைக் குறித்து இந்திர சபையில் ஒரு முறை உரையாட நேர்ந்தபொழுது சரவண வேள் ஒருவரே யாண்டும் தனி முதல் புலவர் எனக் கலைமகளும் உறுதிசெய்திருக் ருெள். புலவன் என்னும் பெயரைத் தமக்கு உரிமையாக முருகக் கடவுளே உவந்து வைத்துக்கொண்டார் என்றால் அங்காமம் எவ் வளவு மகிமையுடையதென்பதை எண்ணி ஆராய வேண்டும். புலவர் சிங்கம் என உலகம் புகழவந்த நக்கீரரும் இம்முதல்வனேப் புலமைப்பேர் புனைந்தே தலைமையாகத் துதித்திருக்கின்றார். அவர் துதித்துள்ள படியை அடியில் பார்க்க.

மாலைமார்ப, நூலறி புலவ, செருவில் ஒருவ, பெருவிறல் மள்ள, பலர்புகழ் கன்மொழிப் புலவர் ஏறே, அரும்பெறல் மரபிற் பெரும்பெயர் முருக, நசையுநர்க்கு ஆர்த்தும் இசைபேராள!”

(திருமுருகாற்றுப்படை) என வரும் இதல்ை இவரது புலமை வீாம் முதலிய நிலைமை கள் புலனும். தமிழ்ச் சுவையை மாக்கித் தகவு புரிந்து வருக லால் செந்தமிழ்த் தெய்வம் என முக்கையோர் இவரை வந்தித்திருக் ன்ெருர். நக்ாேர் பாடலை இவர் நயந்து கேட்டுள்ள நிலையைப் புலவர் பலரும் வியந்து பாராட்டியுள்ளார்.

கந்தன் தமிழ் கேட்ட காட்சி. பொன்னவிர் சுணங்குபூத்த புணர்முலேக் கருங்கண் வள்ளி கன்னலும் அமுதும் தேனும் கைக்குமின் தீஞ்சொல் மாற்றித் தன்னிகர் புலவன்கூறும் தமிழ்செவி தாழ்த்துக் கேளா

அங்ரிசில மனங்களிப்புற்று அறுமுகம் படைத்த கோமான்.”

(சீகாளத்திப் புராணம்)