பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 கம்பன் கலை நிலை

இதில் புலவன் என்றது. நக்கீயாை. அவர் மனமுருகிப் பாடிய திருமுருகாற்றுப்படை என்னும் தமிழ்ப் பாட்டை முரு கன் விழைந்து கேட்டு மகிழ்ந்துள்ளபடியை இதன் கண் விளக்கி யிருக்கல் காண்க. ட்இளமை எழில்களோடு கலையுணர்கிலையிலும் சுவை நுகர்விலும் இங்கனம் உயர்நலமடைந்துள்ளமையால் கலை தெரிகின்ற கோசலநாட்டுக் குமார்களுக்குக் கந்தனே உவமை கூறினர். கந்தனை அனையவர் ‘ என்ற தல்ை அம்மைக்கர்களு டைய அழகு அறிவு ஆண்மை முதலிய பலவகை மேன்மைகளும் ஒருங்கே உணர வந்தன.

பயில் என்ற கல்ை மகளிருடைய பங்தாடலின் அரிய பயிற்சி நிலையும், கந்தன் என்ற குறிப்பால் மைந்தாது இனிய மாண்பு களும் வெளியே இங்ஙனம் விளங்க வைத்துள்ள அருமை எணுகி நோக்கி மகிழ்ந்து கொள்ளத்தக்கது.

உல்லாசமான பொழுது போக்குகள், விாக்காட்சிகள், கல்வி ஆராய்ச்சிகள், சொல்லாடல்கள், சல்லாடங்கள் முதலியன எவரி டமும் உவகைநிலையமாய் ஒங்கியிருந்தன ன்ன்பது இதுகாறும் உரைத்து வங்கவாற்றால் உணரலாகும்.

கிலவளங்களையும், இயற்கை நிலைகளையும், செயற்கை கலங் களையும் இவ்வாறு நேரே சுயமாக விளக்கிவந்த கம்பர் இடையே வேறொரு வகையில் மாறித் தமது சொல்லாடலை எல்லாரும் அறிந்து இன்புறுமாறு உல்லாசமாகவிளையாடியிருக்கிரு.ர்.என்னே அந்த விளையாட்டு? எனின். பின்னே காட்டுதும்; காணுங்கள்.

_

பலவளங்களும் கிறைந்திருந்தாலும் கோசல நாட்டில் சில குறைகளும் உண்டு என்கின்றார் அங்கே கொடையாளிகள் இல்லை; சக்தியம் கிடையாது ; விரமோ யாரிடமும் காணமுடி யாது’ என்று இவ்வாறு கூறியிருக்கிரு.ர். இதைப் பார்த்த வுடனே பலர் திகைப் ார் ; சிலர் நகைப்பர்; சிலர்க்கு நமதுநாட்டு நிலைமை நினைவுக்கு வந்து நமக்கு அது ஒரு கூட்டாளிபோலும் என்று குறிக்கக்கோன்றும். ஆல்ை அவரது பாட்டை நோக் கின் ஐயம் தீர்ந்து மெய்ம்மை தெளிந்து அகமிக மகிழ்வோம். அதி விநயமுடைய நளினமான அக் கவி அடியில் வருகின்றது.