பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 கம்பன் கலை நிலை

மக்களின் உருவகலனும் உள்ளப் பண்பும் எழிலமைதியும் செயற்கை அலங்காரங்களும் எங்கும் தேசுமிகுந்து திகழ்ந்திரும் தன என்பார் பொலிவு பொற்பில் கின்றன ‘ என்றார், பொற்பு = அழகு, அலங்காாம். பொலிவும் அழகும் ஒப்பனை யும் பொற்பெனல் ” (பிங்கலங்தை). காட்சி நலங்கள் கனிந்து யாண்டும் மலர்ச்சியும் மகிழ்ச்சியு மிகுந்து தேசோமயமாய் அத் தேசம் சொலித்து கின்றதென்பதாம்.

நீதிநெறிகள் சத்தியத்தில் கழைத்து வருகலால் பொய்யிலா நிலையில் திே நின்றன என்றார்.

பெண்கள் அன்புடையாாயின் வருந்திவந்தவர்களே ஆகரி த்து, விருந்தினரைப் பேணி, இல்லறங்கள் யாவும் இன்புறச் செய்வாாதலால் மாகாார் அம்பில் அறம் கின்றன’’ என்றார். அற்பு = அன்பு. அறத்திற்கே அன்பு சார்பு என்ப” (குறள் 76) என்ற தல்ை அன்போடு அறனுக்குள்ள தொடர்பு புலம்ை. ஆடவர்களுடைய அன்பினும் பெண்களுடைய அன்பு நேரே உதவி ஆருயிர் இன்புறச் செய்து அறம்புாந்து, அகமும் புறமும் இதம்புரிந்துவரும் ஆதலால் அதன் காம் தெரிய உரைத்தார்.

‘ பெருந்தடங்கட் பிறைநுதலார்க்கெலாம்

பொருங்துசெல்வமும் கலவியும் பூத்தலால் வருந்திவந்தவர்க் கீதலும் வைகலும் விருங்துமன்றி விளேவன யாவையே. (நாட்டுப்படலம், 36.) என்று கோசலநாட்டுப் பெண்களின் பூப்பு நிலையும் காய்ப் பும் கனிவும் முன்னம் புற நிலையில் புகன்றார்; இங்கே அகநிலையை மொழிந்தார். நயனும் வியனும் பயனும் கெரிக.

_காலமாரி = பருவமான மழை. அதாவது உயிர்க்கும் பயிர்க்கும் வேண்டியபொழுது வேண்டிய அளவு இனிதுபெய்வது. புண்ணியம் பொருந்தியுள்ள இடத்தே கான் அவ்வாறு பெய்யும் ; ஆகவே புண்ணியசாலிகளான பதிவிாதைகள் கண்ணியிருக்கும் நாட்டில் அவர் எண்ணியபடியே அம்மழை இயங்கிவரும்.ஆதலால்

காலமாரி அவர் கற்பில் கின்றன ‘ என்றார்.)

“ தெய்வம் தொழாஅள் கொழுநற் ருெழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை. (குறள் 55) என்ற பொய்யாமொழியை அடியொற்றி இந்த இறுதி அடி வந்துள்ளம்ை யறிக. மழை கற்புடையார் சொல்வழி ஒழுகிவரும் என்ற தல்ை அவாது அற்புத நிலைமையும் அருமையும் புலம்ை.