பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 கம்பன் கலை நிலை

முடையதாய் என்றும் ஒளிசெய்து விளங்கும் என இன்னவாறே நூல்கள் பலவும் வழங்கிவருகின்றன.

தமது காவியத்தலமாகிய கோசலத்தைப்பற்றிக் கூறக்கொ - டங்கிய கம்பர் அங்குள்ள ஆணும் பெண்ணும் நெறிமுறைவழுவா நீர்மையர் என முதலில் ந கலிப் புகுந்தார். அந்தப் புனித நிலை மையை மீண்டும் ஞாபகப்படுத்தி மாகார் கற்பை முடிவில் வைத்துப் பொற்புட்ன் இங்கனம் முடிவு செய்திருக்கிரு.ர்.

நீரில் படிக்தெழுந்த எருமைகள் கார்மேகங்கள் போல் கிலத் தில் பால் சொரிந்துவரும் , அந்த இனிய பால் அயலே யுள்ள வயலில் பாய்ந்து நெல்லின்பயிரை நீளவளர்க்கும் ; கோழிகள் குப்பைகளைக் கிளைக்குங்கால் அங்கே மாணிக்க மணிகள் தோன் றும்; அங்கன்மணிகளை மின்மினிப் பூச்சிகள் என்று எண்ணித் தாக்கணங் குருவிகள் தாக்கிக்கொண்டுபோய்த் தம் கூடுகளாகிய விடுகளில் விளக்குகளாக வைக்கும்; கடலருகே வாழும் பாதவர் சிறுமிகள் சங்கு முத்துக்களைச் சிறு வீடுகள் கட்டி விளையாடி எங் கும் சிதறியிருப்பர் , வள்ளிக்கிழங்கை அகழ்ந்தெடுப்பவர் மண் னுள் மணிகளை எடுப்பர்; சந்தனம் சண்பகம் முதலிய இளமரக் சோலைகளும், பரிமளமிகுந்த எழிலுயர் பொழில்களும், குளிர் மலர்ப் பொய்கைகளும், வாழை கரும்பு கமுகு தெங்கு மா பலா முதலிய கனிவளங் கனிந்த இனிய கோப்புகளும் யாண்டும் நீண்டு கிமிர்ந்து நிலவி நிற்கும்; அளவிடலரிய நிதிகளைக் கலம் சுரக்கும்: நிறைவளங்களை கிலம் சுரக்கும்; பொன் குவியலைப் பிலம் சுரக் கும்; நல்லொழுக்கங்களைக் குலம் சாக்கும் ; குளிர் தேனேக் கோதைகள் சொரியும் ; பருமணிகளைப் பாதைகள் சொரியும் ; உறையும் அமுதத்தை ஊதைகள் சொரியும் செவி நகர் கனி களைக் காதைகள் சொரியும்; என இன்னவாறே பலவகை நிலை களையும் புலமை நலம் கனியப் பாடிவந்தவர் அங்கில நலங்கள் எல்லாவற்றையும் பூாணமாகச் சொல்ல யாராலும் முடியாது : பலகாலும் பலகால்களாலும் ஒடியும் சாயுருதி.அங்காட்டின் வரம்பு காணமுடியாமல் மாறி மாறிச் சுழன்று திரிகின்றதே! இருகால் களையுடைய மனிதரால் எவ்வாறு எல்லைகண்டு சொல்ல முடியும் ? எனச் சிலேடை அணியால் விசேடித்து அதன் எல்லையற்ற மகிமையை நாம் எண்ணி வியந்து கொள்ளுமாறு இனிதுசொல்லி இப்படலத்தை முடித்திருக்கிரு.ர். கால் என்றது நீர் ஒடுகின்ற வாய்க்கால்களே. இதில் மூடியுள்ள கயங்களை நாடி அறிந்துகொள்க.