பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. நகர நிலை 169

கவிஞர் என்று நம் கவிநாயகர் இங்கே சுட்டியது நம்மாழ் வார், குலசேகராழ்வார் முதலான பெரியோர்களே.

நம்மாழ்வாத ஞான குணங்களிலும், அவர் அருள் நாலா கிய திருவாய்மொழியிலும் கம்பர் பெரிதும் ஈடுபட்டிருக்கிரு.ர். அக்க ஈடுபாட்டின் ஆர்வ நிலையை இவர் பாடியிருக்கும் சடகோப ரந்தாதியில் தெளிவாகத் தெரியலாம்.

‘ கவிப்பா அமுதம் இசையின் கறியொடு கண்ணன் உண்ணக் குவிப்பான் குருகைப் பிரான்சடகோபன் குமரிகொண்கன் புவிப்பா வலர்கம் பிரான் திருவாய்மொழி பூசுரர்தம் செவிப்பால் நுழைந்துபுக் குள்ளத்துளே நின்று கித்திக்குமே.

“ போந்தேறுக வென்றிமையோர் புகவினும், பூந்தொழுவின்

வேந்தேற டர்த்தவன் வீடேபெறினும், எழிற்குருகடர் நாந்தேறிய அறிவன் திருவாய்மொழி நாளும் நல்கும் தீந்தேறல் உண்டுழ லுஞ்சித்தியே வந்து சித்திக்குமே ‘

(சடகோ ப்ரந்தாதி, 7, 23)

ஆழ்வாசைப் பாவலர் பிரான் எனவும், அவர் கவியை அமு தம் எனவும் கூறி எனக்கு இந்திர பதவி வந்தாலும், வைகுக்கம் கிடைக்காலும் ஆங்கும் திருவாய்மொழித் தீக்தேனை யான் மற வேன் என்ற இதல்ை அவர் பால் இவர் கொண்டிருக்கும் அன் பும் மதிப்பும் நன்கு புலம்ை. பாவலர், பாவில் வல்லவர் என்ற வாறு. காவியத்தில் கவிஞர் என்று சுட்டியுள்ளதையும் இதனையும்

ஒட்டி யுணர்க.

பரிபூரணமான ஞானசீலராய்அன்பின் பேரெல்லையில்கின்று

அக்கமிலா இன்பநிலையைச் செந்தமிழில் தெளித்திருத்தலால் அவர் வாய்ச்சொல் திருவாய்மொழி என வந்தது.

“ யானும் கானுய் ஒழிந்தானே யாதும் எவர்க்கும் முன்ைேனத்

தானும் சிவனும் பிரமனும் ஆகிப் பணேத்த தனிமுதலைத் தேனும் பாலும் கன்னலும் அமுதுமாகித் கித்தித்து என் அணில் உயிரில் உணர்வினில் நின்ற ஒன்றை உணர்ந்தேனே.”

(திருவாய்மொழி 8-74,

கிருமால்பால் பெருமால்கொண்டு ஞானக் காட்சியால் அட் பெருமானேக்கண்டுகளித்துள்ளபடியை வெளியேகாட்டியபடியிது

22