பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 கம்பன் கலை நிலை

2. அயோத்திமா நகரம் பூமிதேவியின் திருமுக மண் லம் போல் எழில் மிகுந்து உள்ளது என்று முடிவாக மொழிந்து விடாமல், ‘முகமோ ? திலகமோ? கண்னே? நானே? உயிரோ? ‘ எனப் பல பல எண்ணி ஒரு துணிவும் தோன்றால் யாது என ’ என்று ஆற்றாமையோடு முடிவில்லாமல் விடுத்தி ருக்கிறார், அதன் மகிமை சொல்ல முடியாதென்பதாம்.

உாைப்பாம்?

இதில் பத்துப் பொருள்களை ஒத்து எண்ணி அவற்றின் அருமை பெருமைகளையும் உயர்வு நலங்களையும் உய்த்துணரும் படி நல்ல சிந்தனைகளை நமக்குத் தந்திருக்கிரு.ர். எண்சாண் உடம்பிற்குச் சிாசே பிரதானம்’ என்றபடி மனித உருவிற்கு முகம் எவ்வளவு தலைமையும் கிலைமையுமுடையதோ உலக வுரு விற்கு அயோத்தி அவ்வளவு முதன்மையும் அமைதியுமுடையது என்பதை முகமோ 2” என்ற தல்ை முன்னுற உணர வைத் கார்) விரிந்து பாந்த பெரிய உலகில் அயோத்தி ஒரு சிறிய ஊர் தானே ; அதற்கு இதை முகம் என்றால் பரிமாணத்தின் கிருமாணத்தைக் குறித்து எதேனும் வாகம் வரினும் வரும் ஆதலால் அதற்கு இடமில்லாமல் கிலகமோ என்றார். நில மக ளுக்குக் கோசல கேசம் முகம் ஆகவும் அம்முகத்தில் இலகும் திலகம்போலும் அயோத்தி அதில்எழில்செய்து இனிதமர்ந்துள்ள தென்பதாம். கண்ணுே என்றது அருமை உரிமை அழகு ஒளி அமைதி முதலியவற்றை எண்ணி என்க. இன்னவாறே நாண் முதலிய பிறவற்றின் இயலமைதிகளையும் நகர் இயல்புடன் கிகர் கண்டு ஒர்ந்து உணர்ந்துகொள்க.

இதில் வந்துள்ள ஒகாரங்கள் எண் முறை கழுவி, ஐயம் தொடர்ந்து, இன்னேசை பொலிந்து, உள்ளுருக்கம் தோன்ற உணர்ச்சியைக் கட்டி யெழுப்பி ஒங்கி கிற்கின்றன. அந் நிலை கவியின் சுவையை மிகவும் இனிமையாகக் கனிவு செய்துள்ளது.

கிலமகள், கிருமகள், திருமால் என்னும் இவர்களோடு அயோத்தியை இதில் உரிமைப்படுத்தி வைத்திருக்கிரு.ர். அவ்

வைப்புநிலை கவியின் உள்ளக்கிடக்கையை உணர்க்கி நிற்கின்றது.

_

அழகும் அமைதியும் இனிமையும் இன்ப நலனும் பெண்

மையின் தன்மைகளாதலால் அங்கன் பைகள் யாவும் நன்கமைக்