பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174, கம்பன் கலை நிலை

குடுமி நெடுநிலை மாடம் ‘ என்னும் தொடர்மொழிகளால் உளம் மிகவியப்ப உரைக்கருளினர். புயல் = மேகம். அயில் = கூர்மை. குலிசம் = வச்சிராயுதம். இக்க ஆயுத அடை இந்திரனுக்குக் கந்தது அவனது அருந்திறலாண்மையும் ஆட்சி கிலையமான அவன் பதியின் பெருங் ககவும் தெரிய என்க.

அடுத்த நான்காவது கவியில் அயோத்தியைப் போக பூமி என்கின் ருர். -

4. அயோத்தி நகமை இன்ப நிலையமான சுவர்க்கம் என்று சொல்ல விரும்பினர் ; அது, இங்கிலவுலகில் செய்த புண்ணியப் பேற்றால் உயிர்கள் இனிது எய்தத்தக்கது. ஆதலால் அதன் செய் தியை முன்னுற விளக்கினர்.

\ . அறம்பெரி தாற்றி அதன் பயன் கொண்மார்

சிறந்தோர் உலகம் படருகர் போல’ (பரிபாடல் 19)

என்னும் இதில் புத்தேளுலகின் பெற்றி புகன்றுள்ளமை யறிக.

இங்கே சிறந்தோர் என்றது தேவரை. இந்தப் பரி பாட வின் அடியைக் கழுவிக் கம்பர் மொழி வந்துள்ளமை காண்க.

துறக்கம் என்பது புண்ணியம் புரிங்கோர் புகுந்திருத்தற் குரியது ; அவ்வுரிமை வேதப் பிரசித்தமானது ; ஆகவே பாம புண்ணியசாலியான இராமன் எண்ணில் காலம் இனி கமர்ந்து அரசு புரிந்திருக்க பெருகலமுடையது ஆதலால் கிருவயோத்தி தலைமையான புண்ணிய பூமியேயாம் என்று உரிமை மீக் கூர்ந்து இதில் உறுதிசெய்திருக்கும் அழகை ஊன்றிப்பார்க்க.

அடுத்த கவியில் இங்ககாம் பொன்னகரினும் சிறந்த கென் கின்றார். -

5. ஐம்பொறிகளே யடக்கி அருங்தவம் புரிந்து பெருங் தகவுடன் உயர்ந்திருக்கின்ற பெரிய தவசிகளுக்கும், அரியஞான யோகிகளுக்கும் இனியபுகலிடமாயுள்ள திருமாலே உவந்துவந்து பிறந்து வளர்ந்து திருவுடன் அமர்ந்து நெடுங்காலம் உளமகிழ்ந் திருந்த இப்புனிதக் கலம்போல் புக்கேளுலகத்து எங்கனும் இனியது ஒன்றில்லை; அங்ாவனம் இருந்திருப்பின் செங்கண்மால் அங்கேயே தங்கியிருப்பார் ; அங்ானம் எங்கும் தங்காமல் இங் கேயே விழைந்து வந்துள்ளமையால் இந்நகரின் ெ பருமையை