பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 கம்பன் கலை நிலை

செல்வத்தினும் கல்வியை முன்வைத்தது அதன் சிறப்பு நோக்கி. * கேடில் விழுச்செல்வம் ” என்று அது புகழ்ந்து போற்றப்பட்டுள்ளமை காண்க. இத்தலைமையும் தகைமையும் தெரியக் கல்வியை முதலில் நிறுத்தி அதன் பின் செல்வத்தை வைத்தார். அறிவிலும் கிருவிலும் அங்ககர் அதிசய நிலையிலுள் ளமை இதல்ை அறிய வந்தது.

‘ காவிற் றிருந்த புலமா மகளோடு நன்பொற்

பூவிற் றிருந்த திருமா மகள் புல்ல நாளும் பாவிற் றிருந்த கலைபாரறச் சென்ற கேள்விக் கோவிற் றிருந்த குடி. ‘ (சிந்தாமணி, காமகள் 1) என்னும் இதை அடியொற்றிக் கல்வி செல்வங்களைக் குறித்துக் கம்பர் இங்கே பாடியிருக்கின்றார் என்று தெரிகின்றது. புலமா மகள் = சரசுவதி. பூம்கள் = இலக்குமி. புல்ல= பொருங்க. இதன் கண்னும் கல்வியை முன் வைத்துள்ளமை காண்க.

எல்லாக்கல்விகளும், எல்லாச்செல்வங்களும், எல்லாரிடமும் அயோத்தியில் இனிது கிறைந்திருந்தன என்று சொல்லவந்தவர், இல்லை இல்லை என்று சொல்லி அவற்றின் இருப்பை உறுதிபெற இங்ஙனம் உரைத்திருக்கிரு.ர். 1.

‘ உருவில் மைந்தரில் வேனில்வேட் குடைகுநர் இல்லை : பொருளில் லார்களில் தனதனைப் பொருவிலார் இல்லை : தெருளில் மாக்களில் சேடனிற் ருழ்குநர் இல்லை ; அருளில் லார்களில் ஐந்தரு கிகர்க்கலார் இல்லை.”

(நைடதம், நகரப்படலம் 9) மாவித்த சகாத்திலுள்ளவர்களெல்லாரும் அழகில்மன் மகனே யும், சம்பத்தில் குபேரனேயும், அறிவில் ஆதிசேடனையும்,கொடை யில் கற்பகத்தையும், மிஞ்சியிருந்தனர் என்பதாம். வேனில்வேள் =மன்மதன். உடைதல் = தோல்வியடைதல். அழகு இல்லை என்று அங்கே எள்ளித் தள்ளப்படுவோன் அழகுக் கெய்வமாகிய காமைேடு ஒத்துஎண்ணப்படுவான் என்கின்றார். இக்கவிக்கு அவ் ஆரின்மேல் உள்ள போபிமானம் இவ்வுரையால் உணரலாகும்.

  • குறள் 400. என்றும் அழிவின்றி கின்று a Fizspiego umiests உதவிவருதலால் கல்வி கேடுஇல் விழுச்செல்வம் ”என வந்தது. விழுமம் =சீர்மை, மேன்மை. தன்னையுடையாரை மேன்மைப்படுத்தி யாண் டும் உறுதிபுரிந்து நெடிது பேணிவரும் சீர்மை தெரிந்து கல்விக்கு வள் ளுவப் பெருந்தகை பேர் வைத்திருக்கும் அருமையைப் பார்க்க.