பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 203

இவ்வாறு குறிக்கிருக்கிருன். இங்கே பாவை என்றது கைகேசியை. அமர்கருதி அமாருலகம் செல்லுங்கால் அது பொழுது புதுமணம் புரிந்துவந்திருந்த தன் மனைவியையும் இவன் உடனழைத்துப் போனன். அங்கே போர் எழு நாள் தொடர் ந்து கடந்தது. விரவுணர்ச்சி நிரம்பியிருந்த கைகேசி போர் நீளுகின்றதே! என்று கவன்று கடைசி நாள் கனது நாயகன் தேரை அவளே செலுத்துவதாகச் சொன்ள்ை. தசரதன் வியந்து சரி என்று இசைந்தான். அன்று அத்தருண மங்கை அருணனும் அதிசயிக்க அமரில்மூண்டு அதிசாதுரியமாக யாரும் அறியாத அற்புத கிலையில் கேமை நடாத்தினுள். அதனேநோக்கி அகமிக மகிழ்ந்து வீராவேசத்துடன் பகைவர் படைகளைப் படு களப்படுத்திக், திசைதொறும் எதிர்க்க அசுரர் தலைவர் அனே வரையும் அடியோடு வென்று அமார் எதிர்கொள்ள அாசன் மீண்டான். அந்தப் பெரிய வெற்றிக்கு உற்ற தனையாய் அன்று உடனிருந்துதவிய தனது அருமை மனைவியின் உரிமையைஉவந்து, :பாவை கோல் கொள’ என்று யாவரும் அறிய ஆவலுடன் உாைத்தான். நிகழ்ச்சியை இவ்வாறு உாைக்கிருப்பினும், ‘ஒரு பெண்ணே ஒப்புக்காக உதவிக்கு வைத்துக்கொண்டு எண்ணில் அடங்காப் பகையை விண்ணில் வென்ற எனக்கு மண்ணில் ஐவரை வெல்வது பெரிதா’ ? என்ற குறிப்பும் இதில் தொனிக் திருக்கின்றது. அஞ்சுகேர் என்றது வாய் கண் முதலிய ஐம் பொறிகளை. இழுதை=மூடன், பேய். மனத்தை மடையன் என்றது பின்னல் வருந்துயரங்கள் ஒன்றையும் கருதாமல் கண்ட படியே புலன்களில் மண்டித்திரியும் அதன் மடமையை நோக்.ெ

உலகபோகங்களைத் துறந்து அகமுகமாய்த் திரும்பி ஆன்ம கிலையை அவாவி எழுவார் எவரும் இந்த மனநிலையை இவ்வாறு இகழ நேர்வர். புலன் நுகர்வில் அல்லல் மிக விளைத்து அலைக் கழிவு செய்து எல்லையில்லாத பிறவிக்கொல்லைகளுக்கெல்லாம் எதுவாய் கிற்றலால் அங்க மனத்தின் பொல்லாங்கை வெறுத்து அதனை அறவே வெல்லவேண்டும் என்று அறவோர் இங்கனம் அடர்ந்து கிற்கின்றார்.