பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 209

யான அரசு இல்லாத நாடு, ‘தாயிலாக் குழவி போலச் சாதுயர்

எய்துகின்றேன். ‘ (சீவகசிந்தாமணி) என்றபடி வெய்துயிர்க்

துழலும் என்பது பெற்றாம்.

இது யாதும் சேராமல் கண்ணும் கருத்துமாய் கின்று குடி களைப் போன்புடன் தசரதன் பாதுகாத்து வந்தான் என்பார், அன்பில், தாய் ஒக்கும் ‘ என்றார். இதல்ை அவனது உள்ளப் பண்பும், உருக்கமும், உதவி நிலையும் உணர வந்தன.)

அடுத்துத் தவத்தைக் கொடுத்தார். முன்னேயதினும் இது துணுகியது. தாய் என்றால் யாருக்கும் தெளிவாகத் தெரியும் ; தவம் அவ்வாறு தெரியாது. தவம் என்றால் என்ன ? மனம் மொழி மெய்கள் தீயவழிகளில் செல்லாமல் அடக்கி கல்ல நெறி யில் கின்று எல்லா உயிர்கட்கும் இதம்புரிந்துவருவது எதுவோ அது தவம் என்க. )

‘ உயிர்நோய்செய் யாமை : உறுநோய் மறத்தல் :

செயிர்நோய் பிறர்கட் செய்யாமை-செயிர்நோய் விழைவு வெகுளி இவைவிடுவ யிைன்

இழவன் றினிது தவம்.” (சிறுபஞ்ச மூலம்) உற்றநோய் கோன்றல், உயிர்க்குறுகண் செய்யாமை, அற்றே தவத்திற்கு உரு ‘ (குறள் 261)

தவம் இன்னது என்பது இவற்றால் இனிது புலம்ை. இத்தவம் உயிர்க்கு உறுதியாய் ஒளிமிகச் செய்யும். இதனை இழந்திருக்கும் உயிர்கள் அவகிலையில் இழிந்துழலும். மனிதன் அடைகின்ற எல்லா இன்ப கலங்களுக்கும் தவமே மூல காரணமாயுள்ளது. உள்ளுற இது இல்லையாயின் வெளியே எவ்வளவு அவாவி முயன்றாலும் கல்ல பயன்கள் காடியபடி கிடையா.

“உய்த்தொன்றி ஏர்தங்து உழவுழுது ஆற்றவும்

வித்தின்றிப் பைங்கூழ் விளேக்குறல் என்னொக்கும்? மெய்த்தவம் இல்லான் பொருளொடு போகங்கட்கு எய்த்துழந்தே தான் இடர்ப்படுமாறே. (வளேயாபதி) விளைவுக்கு வித்தைப்போல் பொருள் ே பாகங்களுக்குத்தவம் ஆதாரமாயுள்ளது ; அது இல்லாத இடத்தில் நல்ல சுக போகங் கள் உளவாகா என இது உணர்த்தி கிற்றல் காண்க.

27