பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 கம்பன் கலை நிலை

காண்க. உறை-மழைத்துளி. உறை கோடி என்ற த பருவ காலங்களில் பெய்யாமல் மழை மாறிப்போம் என்பதாம்.

உலகிற்கும் அரசிற்கும் உள்ள உறவும் பொறுப்பும் இதல்ை நன்கு உணரலாகும். அவன் செங்கோலன் ஆல்ை இங்கே எல்லா வளங்களும் செழித்து விளங்கும்; வெங்கோலனயின் உயிர்கள் பல வகையிலும் படுதுயரங்கள் அடையும் என்பது கருத்து:

கோன் நிலை திரிந்திடிற், கோள்கிலே திரியும் : கோள்கிலே திரிந்திடின், மாரிவறங்கூரும் : மாரிவறங் கூரின், மன்னுயிர் இல்லை; மன்னுயிர் எல்லாம் மண்ணுள் வேங்தன் தன்னுயிர் என்னும் தகுதியின்றாகும். (மணிமேகலை)

கோனிலை திரிந்து நாழி குறைபடப் பகல்கள் மிஞ்சி னிேலம் மாரியின்றி விளைவஃகிப் பசியும் நீடிப் பூண்முலை மகளிர்பொற்பிற் கற்பழிந்து அறங்கள் மாறி ஆணையில் வுலகுகேடாம் அரசுகோல் கோடின் என்றான்.” (சீவகசிந்தாமணி)

கிறந்தலே மயங்க வெம்பி நெடுங்கடல் சுடுவதாயின் இறந்தலே மயங்கு நீர்வாழ் உயிர்க்கிடர் எல்லையுண்டோ? மறந்தலே மயங்கு செவ்வேல் மன்னவன் வெய்யயிைன் அறந்தலே மயங்கி வையம் அரும்படர் உழக்குமன்றே.’

(சூளாமணி)

வேந்தன் முறை திறம்பின் வேத விதிதிறம்பும் ; ஏந்திழையார் தம்கற்பும் இல்லறமும் கில்லாவாம் : மாந்தர் பசியால் உணங்க, மழைவறந்து, பாந்தள் முடிகிடங்த பாரின் விளை வஃகுமால்.”

(பிரமோத்தரகாண்டம்)

தற்பாடு பறவை பசிப்பப் பசையற நீர்குற் கொள்ளாது மாறிக் கால்பொரச் சிரை வெண் டலைச் சிறு புன் கொண்மூ மழைகா லுான்றா வளவயல் விளையா : வாய்மையும் சேட்சென்று கரக்கும் தீது தரப் பிறவும் எல்லாம் நெறிமாறு படுமே : கடுஞ்சினம் கவைஇய காட்சிக் கொடுங்கோல் வேந்தன் காக்கும் காடே. (ஆசிரியமாலை)