பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 கம்பன் கலை நிலை

கும் இனியனவாய் உரிமையுடன் உயிர்வாழ்ந்திருந்தன என்பார், பறவையும் விலங்கும் ஒருவழி ஒட ‘ என்றார்) ஒரு வழி என்றது நெறிவழுவாத நேர்வழியை. பகுத்தறிவு நன்கு வாய்க் கப் பெருதவைகளும் இங்கனம் நல்வழியில் ஒழுகின என்றால் அவ்வறிவு மிகுத்துள்ள மக்களின் ஒழுக்க மாட்சி சொல்லவேண் டாதாயிற்று. அருந்தவமும், சிறந்த அாசநீதியும் நிறைந்துள்ள இடத்தில் உயர்ந்த சத்துவகுணமே ஒங்கி கிற்கும் ஆதலால் அங்கே எத்துணைக் கொடிய பிராணிகளும் செற்றமின்றி இத முடையனவாகவேயிருக்கும் என்க. இழிந்த பிராணிகளும் உளங்கலங்து ஒருமையுடன் உவந்து வாழ்ந்தன என்றது ஆளு கையின் நலம் தெரியவந்தது.

புலிப்போத்தும் புல்வாயும், ஒரு துறையில் நீர் உண்ண உலகாண்டோன் உளன் ஒருவன் ‘(குலமுறைகிளத்துபடலம் 5) என்று கசாதனுடைய முன்னேருள் ஒருவகிைய மாந்தாதாவைக் குறிக்கிருத்தலும் ஈண்டு அறியத் தக்கது.

பெண்கள் இயல்பாகவே சபலநெஞ்சினர். அதிலும் குடி வாழ்க்கையின்றிப் பொது நோக்காய்ப் பொருள் கருதி கிற்கும் பொது மகளிர்': உண்ணிறை யுடைய வல்ல ; ஒாாயிர மனத்த வாகும் ‘ என்றபடி பலவாறு நிலை கிரிந்தே யிருப்பர்.

பள்ள முதுநீர்ப் பழகினும் மீனினம் வெள்ளம் புதியது காணின் விருப்புறுாஉம் கள்ளவிம் கோதையர் காமனெ டாயினும் உள்ளம் பிறிதாய் உருகலும் கொள்.ே” (வளையாபதி) என வரும் இகனல் அவர் உள்ளங்லை யுனாலாகும்.

(இங்கனம் யாண்டும் என்றும் ஒருவழிப்படாத உள்ள முடைய அவரும் கசாதனது நீதி நெறியை அஞ்சி உள்ளம் திருந்தி யாதொரு கள்ளமுமின்றி முறையே ஒழுகி வந்தார் ஆதலால், :வேசியர் உள்ளமும் ஒருவழி ஒட கின்றவன்’ என்றார்.

நீர்முதலாக எண்ணி முறையே மேலேறி வந்தது அவற்றின் சீர்மை நோக்கி. வைப்பு முறையிலுள்ள நுட்பம் அறிக. உயி சில்லனவும் உள்ளனவும் ஆகிய சராசரங்கள் யாவும் நெறிமுறை

யே ஒழுகிவர அரசுமுறை விழுமிதாய் நிலைத்திருக்க தென்பகாம்.