பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

கம்பன் கலை நிலை


அச்சுப் பொறிகள் எவ்வளவுக்கு எவ்வளவு வந்தனவோ அவ் வளவுக்கு அவ்வளவு மக்களுடைய மனன சக்தி மறைந்து போயது, போய்க்கொண்டே யிருக்கின்றது. போகும் வேகம் அபாயமாகவே யுள்ளது.

ஆகவே அச்சு முதலிய புதிய சாதனங்கள் யாதும் வேண்டாம் என்ற நான் கருதியுள்ளதாக எவரும் உறுதிகொள்ளலாகாது. பின்னர் நோக்கம் என்னை? எனின், மனப்பாடம் செய்கின்ற அந்த அற்புதமான நினைவு நிலையை இடைவிடாது பயிற்சி செய்து மீண் டும் உயர்ச்சி யடைய வேண்டும் என்பதே ஈண்டு எனது வேண்டு கோள். அங்கனம் பயின்றுகொள்ளாமல் மேலும் அயர்த்திருந்தால் மக்களுடைய உள நிலை உரம்கெட்டு உறுதி குன்றிப்போம். உள்ளம் குன்றினோ எல்லாம் குன்றி இழிந்துபடநேரும்.

அறிவு நலம் சுரந்த இனிய கவிநுகர்ச்சி உள்ளத்துக்கு உறுதி யும் இன்பமும் ஒருங்கே தருதலால் அவிநுகர்ச்சி என ஆன்றாேர் அதனை ஆதரித்து வருகின்றார்,

நமது தாயகமாகிய தமிழ்மொழி பண்டு தொட்டே அந்தமில் இன்பமுடையதாய்த் திருந்திய பண்பும் சீர்த்த நாகரீகமும் அமைந்து சிறந்த கவிகளால் செழித்து வளர்ந்து உயர்ந்து வந்துள்ளது. அக் கவிகளின் இனிமையும், கருத்தின் ஆழமும், பொருட் பெருக்கமும், எண்ணின் பரப்பும் அளவிடலரியபடி கடலினும் பெரிதாய் விரிவடைந்துள்ளன. கலை அறிவாகிய கப்பலில் எறி அந்த அமிர்தக் கடலில் உல்லாசமாக உலாவிவருபவர் இந்த மண்ணுலக இன்பத்தை மறந்தேவிடுவர். விண்ணுலக இன்பத்தினும் சிறந்ததாகக் கவியின்பம் எண்ணப்பட்டுள்ளது.

தேக போகம், இந்திரிய சுகம், மானச இன்பம் ஆகிய இவை களுக்கெல்லாம் அப்பால் அதிகமாய் அறிவானந்தம் அமைந்திருக் கின்றது. அந்த ஆனந்தம் சிறந்த கவிகளிலிருந்து தான் விளைந்து வருகின்றது. புத்தி தத்துவத்தில் நின்று அனுபவிக்கின்ற அந்த அற்புத இன்பம் ஆத்மானந்தத்திற்கு அடுத்தபடியாக அருகே இனி தமர்ந்துள்ளது.