பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 கம்பன் கலைநிலை

உவமையாய் வந்தது.’ இங்ானம் புலவர் பலராலும் போற்றி வந்த பொதுக்காட்சியோடு கம்பாது கலைக்காட்சி வேறுபட்டுள் ளது. எல்லாரும் அரசை உயிர் என்றனர். இவர் உடம்போடு ஒப்புாைக்கிருக்கின்றார்.)

வெயில் மழை முதலிய துயரங்கள் யாவும் பொறுத்துப் பல வகையிலும் கண்ணுான்றிப் பெரிதும் முயன்று வேருென்றையும் எதிர்பாாமல் உயிர் இன்பம் ஒன்றையே நாடிப் போன்போடு உடம்பு அதனைப் பேணி கிற்றல்போல் கன்னலம் யாதும் கருதா மல் உலகுயிர்களின் நலங்களையே யாண்டும் கருதித் தசரதன் உரிமையுடன் அவற்றைப் பேணி வந்தான் என்பதாம். இதல்ை இவ்னது பரிபாலனத்தின் பான்மையும் மேன்மையும் நன்கு தெளி வாயின. -

தனக்கென வாழாப் பிறர்க்குரியாளயைப்பெருகியுள்ள இக் தகைய உத்தம அாசனை ஒரு நாடு கிடைக்கப்பெற்றால் அது எத்துணை இன்ப நலங்களையுடையதாய் எழில் மிகுந்திருக்கும் ! 1 ஏகாதிபத்தியம், சனநாயகம், சர்வாதிகாரம், குடியரசு எனக் கலாம் விளைத்து இக்காலத்தில் படியறிய வந்துள்ளவற்றிற்கும் இம்முடியரசுக்கும் உள்ள வாசியை ஊன்றி யறிய வேண்டும். U

தமக்கு இதவுரிமைகள் வேண்டும் என்று குடிகள் கொதிப் பனவெல்லாம் அரசனுடைய கொடுமைகளேயே விளக்கியுள்ளன. செங்கோலய்ைச் செவ்விமிகுந்து கண்ணளி புரியும் மன்னவன் அடிக்கீழ் மன்னுயிரெல்லாம் மகிழ்ந்திருக்கும் என்க. ==

தாய் பிள்ளையைப் போற்று கல்போல், உடல் உயிரைப் பேணு கல்போல் குடிகளைக் கசாகன் பேணிவந்தான் என இங்கே நம் கவியாசர் கூறியபடி புவியாசர் புரிந்தவரின், அங்கஅரசாட்சி எவ்வளவு திவ்விய நிலையில் செழிக்கிருக்கும்? அங்காட்டில் உள்ள குடி சனங்களின் உயிர்வாழ்க்கை எக் துணை உயர்வுடன் ஒளி செய்து விளங்கும் ? என்பவை ஈண்டு உய்த்துணரவேண்டும். இன்ப நிலையமான அச்செங்கோல் மன்னனைக் குடிகள் கண்னென உயிரெனக் கனவிலும் கனவிலும் எண்ணிப் போற்றி வருவரே யன்றி, யாதேனும் இகழ்ந்து தாற்ற நேர்வாா குடிக்குழப்பம் முடிக்கிழப்பம்” என்னும் பழமொழியால் உலக அமைதி அரச னது அருளமைதியைப் பொறுத்துள்ளதென்பது நன்கு புலம்ை.