பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 கம்பன் கலை நிலை

அறிவுலகத்தை அமைத்து மனித சமூகத்தைப் புனிதமும் இனிமையுமுடையதாகக் கவிகள் புரிந்து வருகின்றனர். சட வுல கத்தில் மலிந்துள்ள குற்றங் குறைகளை யெல்லாம் கொழித்து நீக்கி நல்ல உத்கம கலங்களை உருப்படுத்தி உயிர்களுய்யஉணர்க்கி யருள்கின்றனர். அகவுலகிலும் புறவுலகிலும் அவர் அழகு மிகச் செய்கின்றனர். யாண்டும் அழகையே அவர் காண்கின்றனர். அதனையே விழையுடன் என்றும் மொழிகின்றனர்)

அவர்களுடைய இருதயம் கலைகலம் சாந்து தெளிவமைத்து ஒளிமிகுந்து தெய்வப் பெற்றி வாய்ந்திருப்பதால் அவர் திவ்விய புருடராய்க் திகழ்ந்துள்ளனர். திருவுடைய முடி மன்னரினும் அறிவுடைய இவர் அதி கம்பீா கிலையில் கலைமையுடன் என்றும் நிலவி நிற்கின்றனர். கலையணங்கின் கருணைமிகப்பெற்றமையால் யாண்டும் தலை வனங்காமல் தனிமுதல்வாய்த் தழைத்துவிளங்கு கின்றனர். இங்கில இந்நாட்டில் மட்டும் அன்று; எங் நாட்டிலும் உண்மையான கவிஞர்கள் உயரிய சக்காவர்த்திகளாகவே ஒங்கி ஒளிர்கின்றனர். அமரிக்கா தேசத்துப் பெரும் புலவரான எமர்சன் என்பவர் கவிஞரைக் குறித்து உாைத்திருக்கும் வாக் கியம் ஒன்று அடியில் வருகின்றது.

“The poet is not any permissive potentate, but is

emperor in his own right.” (Emerson)

சீரிய கவிஞன் யாரையும் எதிர்பாாாக போாசய்ைப்

பெருகியிருக்கின்றான்.’’ எனவரும் இதனுல் கவிஞருடைய உள்

ளப்பான்மையும், உயரியமேன்மையும் உணரலாகும்.)

இங்கனம் உன்னத நிலயில் இங்கி ஒளிர்கின்ற நம் கவிச் சக்கரவர்த்தி ஒரு புவிச் சக்கரவர்த்தியைக் குறித்து இதுகாறும் உாைத்து வந்த வகைகளை நாம் உணர்ந்து வந்தோம். இனி அம்மன்னனது வாழ்க்கையில் நிகழ்ந்த கிகழ்ச்சிகளையெல்லாம் 1முறையே நோக்கி மகிழ்வோம்.

தசரதன் சிந்தனை.

செங்கோல் வேந்தனுய்த் திசைதொறும் இசை பாப்பித் தேசம் புரந்துவங்க தசரத்ன் ஒரு நாள் சிங்காகனத்தில் வீற்றி ருக்குங்கால் சிந்தனை ஒன்று தெய்வீகமாகக் கிளர்ந்கெழுத்தது. சிந்திக்கின்றான்: கல்வி செல்வம் அதிகார முதலிய உயர் கலங்