பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 கம்பன் கலை நிலை

என்னும் உண்மையும் இதில் உய்த்துணரவுள்ளது. இக்கரும பூமியின் கருமவகையும் தருமகிலேயும் இதல்ை இனிதறியலாகும்.

3. சக்கரம் சங்கு அரவணை திருமாலின் அங்கங்கள்.ஆதலால் அப் பெருமான் இங்கே அவதரித்த பொழுது அவை முறையே பரதன் சத்துருக்கன் இலக்குவன் என வந்து இராமனுக்குத் துணைகளாய் கின்றன என்க.

இந்தப்பரம ரகசியத்தைத் தமது ஞானநோக்கினல் வசிட்ட முனிவர் அறிந்ததும் உள்ளம் பூரித்து உவகைமீக் கூர்ந்தார். ஆயினும் இந்த உண்மையை மன்னனிடம் வெளிப்படையாக ஒன்றும் சொல்லாமல் வேறுபல நீதிகளை இயம்பிக் தேறுதலாக ஆறுதல்கூறி, அரசே! நீர் யாதும் கவலவேண்டாம்; இறைவன் விரைவில் அருள்புரிவான். கருதிய நலங்களைக்கருமமும் கருமமும் உயிர்களுக்கு உறுதியாயுதவும்; புண்ணிய சீலாாகிய நீர் எண்ணிய படியே எல்லாம் எய்தி மகிழ்விர்! புத்திரகாமேட்டி என்னும் யாகம் ஒன்றை இப்பொழுது நீர் உடனே செய்யவேண்டும்: அங் நஎனம் செய்யின் இந்த மண்ணுலகம் மட்டும் அன்று விண்ணுலக மெல்லாம் விழைந்து போற்றும் சிறந்த புதல்வர்கள் உமக்குப் பிறந்தருளுவர்; அந்த அருமை மக்களால் நீர் அடையும் பெரு மைகள் அளவிடலரியன. அகில உலகங்களும் அவரால் உவகை யில் உயரும் ; இதன உண்மையாக நம்பும்; விரைந்து வேள்வி செய்யும்’ என இன்னவாறு முனிவர் சொன்னவுடனே மன்னன் பெருமகிழ்ச்சியடைந்தான். உளமலியன்போடு உரிமைமிகுந்து உவகையுரை யாடினன். ஞானசீலரான தேவரீாைத்துணேயாக அடைந்துள்ள எனக்குக் கிடையாத பொருள் யாது? யாவும் எளிதில் அடைந்து கிலம்புரத்கலாகிய என் குல உரிமையைத் தேவர் அருள் வலியால் இதுவரை நலம்பெறச் செய்துவந்தேன்; இன்னும் அவ்வாறே செய்துவர இன்னருள்புரிக’ என்குலம் கழைக்க வந்த தேவாது நலம் தழைத்த மொழிகளால் இன்று நான் உளம் கழைத்துள்ளேன். சுட்டிய வேள்வியைச் செய்யத் துணிகின்றேன். வேண்டிய பொருள்கள் யாவும் ஈண்டியுள்ளன. |அடிகளே நாயகமாய் கின்று அந்தப் புனித யாகத்தை இனிது

முடித்தருள வேண்டும் ’’ ஞன். முனிவர் இன்னருள் புரிந்து இனிது நோக்கி, மன்னர்

என்று மன்னன் முடிவணங்கி வேண்டி

மன்னவ! சொன்ன அவ்வேள்வியை என்னல் ஆற்ற இயலாது ;