பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 245

சொல்லழகுகளை நோக்கியே இக்கவிகளைப் பலமுறையும் படிக்கத் கோன்றும். படித்துப்பாருங்கள் ; செவிக்கும் வாய்க்கும் இனி யனவாய்க் சிங்தையில் இனிப்பது புலம்ை.

மனிதரை விலங்குகள் என்று எண்ணும் கனி இயல்பு முனி வரிடம் முனைந்திருந்தமையால் அதனை இங்கும் கினைந்து குறிக் திருக்கிறார், கோது இல் குணம் என்றது குற்றமற்ற பண்புகளை. அவையாவன அருள் அடக்கம் பொறுமை வாய்மை முதலிய குனகலங்கள். காமம் வெகுளி மயக்கம் முதலிய தீமைகள் யாது சத்துவகுண சம்பன்னாய் உத்தமமான தவநெறியில் (5.LSeir உயர்க்கிருங் கார் ஆதலால், கோதில் குணத்து அருந்தவன்”

என்றர்.) ஆகவே இம்மாதவர் மகிமை நன்கு அறியலாகும்.

இத்தகைய முனிவரை அழைத்துவரச்சென்ற அந்த அழகி கள் அங்கே புரிந்த வித்தகச் செயல்கள் மிகவும் வியப்பிற்குரியன.

தேர் எறிச் சென்ற அவர் நெடுவழி கடந்து முனிவர் வசிக் கும் கவ வன க்கையடைந்தார். உடனே நேரே நெருங்காமல் இபண்டு நாழிகை வழியளவில் அயலே கங்கி அங்கே ஒரு குடிசை அமைக் கார். இலை கழை கொடிகளால் அழகுறப் புனைந்து அதனை இனிய பன்னசாலை ஆக்கினர். தாம் உடுக்கியிருந்த சிறந்த உடை அணிகளை ஒருங்கே களைந்து ஒதுக்கிவைத்துச் சிவந்த ஆடை அணிந்து, கூந்தலை உச்சியில் முடியாகச் சுற்றிக் கட்டி, உடல் முழுவதும் வெண்ணிற பூசி அரிய கவயோகிகள் போல் அமர்ந்து உரிய சமயத்தை எதிர்நோக்கியிருந்தார். முனி வரை எவ்வாறு காண்பது? என்ன விதமாய்ப் பேசுவது? எப்படி வசப்படுத்துவது?’ என இப்படிப் பற்பல கினைந்து விற்பனமுட உறைந்தார். முனிவருடைய தங்தையார் விபாண்டகர் என்பவர் பெரிய தவசியாயினும் புத்திாவாஞ்சையால் எப்பொழுதும் அவ போடு இனிதமர்ந்திருந்தார். உலகை மறந்துள்ள பிள்ளையை உள்ளம் மறவாமல் உரிமைகொண்டு அவர் உடனுறைந்துள்ளதை யறிந்து இவர் உள்ளங் கவன்றார். அவர் இல்லாதிருக்கும் சமயத்தை என்.றும் எதிர்பார்த்து கின்றார். பிரியமுடைய அவர் பிரிய நேர்வதை நுணுகி ஆராய்ந்து வருங்கால் ஒரு நாள் இயல் பாக அவர் அயலகல நேர்ந்தது. உடனே விரைந்த இவர் முனி வர் சாலையை நளினமான நிலையில் மிகவும் விநயமாக அடைந்தார்.