பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 கம்பன் கலை நிலை

மொழிகள் வழங்கி வருவதைக் கண்டு விதிகள் விளங்கி வருகின்றன என்பதை இகனல் அறிந்துகொள்ளலாம். இக் குறியிட்டு வழக்கம் நூல் வழக்கிலும், உலக வழக்கிலும் பண் டைக் காலங் கொட்டே பயின்று வருகின்றது.

“ சலசல மும்மதம் சொரிய (சிந்தாமணி, 82) ‘ களகள முழங்கும் வேழம் (சிந்தாமணி, 806) “ சலசல மி.முற்றும் சமய விகற்பமும் (பெருங்கதை 1, 32) ‘ குறுகுறு கடந்து சிறுகை நீட்டி’ (புறம், 182) ‘ கல கல கூஉம் (நாலடியார் 140)

என வருவன காண்க. ('சளசள என்று இவன் என்ன ஒயாமல் பேசுகின்றான்?’ எனப் பொது மக்கள் வழங்கி வருத அலும் அறிக. இந்த வழக்கச் சொல்லைக் கம்பர் இங்கே அழகாகக் கையாண்டிருக்கிரு.ர். சளசள என்னும் இக்குழுமொழி அன்று பெய்த மழையின் மிகுதியை இன்றும் ஒலித்து உணர்க்கிக்கொ ண்டே யிருக்கிறது. ஒலி கிலைகள் பலவகையின.

‘களகள உதிர்ந்தது கயற்கண் ஆலியே.

(பாலகாண்டம், உண்டாட்டு 29) ‘ குண்டிகை யிருந்தருேம் கொளகொள கொதித்ததன்றே,

(வருணனை வழி வேண்டுபடலம், 61.) கெண்டைத் தடங்கண்ணுள் உள்ளே கிளுகிளுத்தாள்

- (மாயாசனகப்படலம் 87) இரட்டைக் கிளவியை இன்னவாறு பின்னரும் கம் காவியத் துள கவி இசைக்கிருக்கிரு.ர். இடங்கள் தோறும் அது குறித்து கிற்கும் ஒலி நலங்களை உய்த்துணர்ந்து கொள்க.

இதில் மேகத்திற்குக் குறிக்கிருக்கும் உவமை கூர்ந்து சிந்திக்கவுரியது. களன் = கழுத்து. கடு=விடம்.

வானவன் களன் அமர் கடு என முகில் கருகி என்றது. சிவ பெருமான் கண்டத்தில் தங்கியுள்ள நஞ்சைப்போல் மேகம் கருமை நிறம் அடைந்து என்றவாறு.

நீர் உண்டு குல்கொண்ட கார்மேகத்திற்கு ஒப்புக்கூறக் கருமைகிறமுடைய அருமையான பொருள்கள் எவ்வளவோ இருக்கவும், அவற்றையெல்லாம்விடுத்து இங்கே விடத்தை உவமை குறித்தது அகன் இடத்தையும் இயல்பையும் பயனையும் எண்ணி என்க. உள்ளுறை கயங்களை நன்றாக ஊன்றி அறிந்துகொள்க.)