பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 கம்பன் கலை நிலை

கண்டமட்டும் என்றது வேண்டிய மட்டும் எனவும், கழுத்து அளவும் எனவும் இருபொருள் கரும்படி இசைக்கிருக்கின்றர். விடம் உண்டு கருமை எய்தியுள்ள பாமனது கண்டத்தின் கருணேயை இவ்வண்ணம் புலவர் பலரும் புகழ்ந்து பாராட்டி யிருக்கின்றனர். ஆலம்போல் கறுத்து அமுதம் பொழிந்தது என்க. f உரோமபதன் காட்டில் மழைபெய்ய நேர்ந்த மேகம் உமா பதியின் களனமர் கடு எனக் கருகிவந்தது என்னும் இவ்வுரை அருமை மிகவுடையது. இக்கருத்து கவியின் கருத்தில் விரை ந்து உதித்த நிலை வியந்து நோக்கவுள்ளது. இனிய மழைபொழியும் மேகத்திற்கு இன்னத கடுநிறத்தை இணைத்துக்காட்டி, அது அடைங்கிருக்கும் புண்ணிய கிலையை எண்ணி மகிழவைத்தார்.

நீண்ட காலமாக வறண்டிருந்த அந்நாடு இவ்வுயர் மழை பெய்யவே உயிர்களெல்லாம் அதிசயமுடையனவாயுள்ளங் களித் தன. குளங்களும் நதிகளும் பெருகி வெள்ளம் எங்கும் விரிந்து

பாங்தது. }

மழை தொடங்கியவுடனே முனிவர் காட்டுள் வந்துவிட்டார் என்று அாசன் உணர்ந்து அகமிக மகிழ்ந்து மந்திரி புரோகிதர் பிரதானிகளுடன் அவரை எதிர்கொண்டு காணவிரைந்து எழுங் தான். படைகளும் குடை கொடி விருதுகளும் புடைசூழ ஆவ லோடு நான்கு நாழிகை வழி தாரம் கால்நடையாய் நடந்து அக் காவலன் கடுகி வந்தான். மாதர்பின் அம் மாதவர் வருவதைக் கண்டான். மகிழ்ச்சிமீக்கொ ண்டு விாைந்து முன்போய் அவாடி மேல் கன்முடிபட கெடிது விழ்ந்தான். அருந்தவக் குரிசிலான அப்பெருங் ககை வாவால் மழை வந்ததே என்று உளமிக வுருகி விழிநீர் சொரிந்து விழைவுடன் எழுந்த ஆர்வமீதார்த்து குழைந்து முன் கின்றான். அவன் வணங்கி நின்றதும், தவசிகள் என உரிமையோடு தம்முடன் வந்தவர் அவனைப் பணிந்து போனதும், சனங்கள் அயலே திாண்டுள்ளதுமாகிய அங்கிலைகளைக் கண்டதும் வெருண்டு நோக்கி எதோ வஞ்சனபுரிந்துள்ளார் T o முனிவர் வெஞ்சினங்கொண்டார். அக் கோபக் குறிப்பைக் கண்டதும் அாசன் அஞ்சி மீண்டும் வணங்கித் தன் நாட்டில் மழையின்றி யிருந்த இன்னல் நிலையையும் அத்துயர்நீங்கச் செய்தவகையையும் உரிமையுடன் உள்ளம் உருகி உாைத்தான். பலஉயிர்கள் நலமுற