பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவியின் பெருமை

25


கம்பர் கோதாவரி நதிக்குக் கவியை உவமை கூறியுள்ளது போலவே கல்லாடரும் வையை நதிக்கு அதனைப் பெய்திருக்கிறார்.

“நிறையுடைக் கல்வி பெறுமதி மாந்தர்
ஈன்றசெங் கவிஎனத் தோன்றி நனி பரந்து
பாரிடை இன்பம் நீளிடைப் பயக்கும்
பெருநீர் வையை வளைநீர்க் கூடல்”

(கல்லாடம் 3)

இதில் கவியானது உலகிற்கு இன்பம் உலவாது பயக்கும் என்று உணர்த்தியுள்ள நிலை ஊன்றி உணரத்தக்கது.

அறிவுக்கு விருந்தான கவியுணவு இல்லையேல் புவியினர் இரு கால் விலங்குகளாய் இழிந்துபடநேர்வர். பாவின் சுவையை விரும் பாமல் நாவின் சுவையையே நயந்து நிற்குமாயின் அறிவு நலங்கள் யாவும் இழந்து நடமாடும் பாவைகளாய் மானுடங்கள் முடிவில் ஈனமடையும் என ஒரு ஞான முனிவர் நவின்றிருக்கின்றார்.

உயிர்க்கு உறுதியான இனிய உணர்வு நலங்கள் உள்ளுற நன்கு உறைந்திருத்தலி னாலேதான் கவிகளுக்கு இவ்வளவு பெருமை அமைந்திருக்கின்றது.

இரசவாதி இழிக்க உலோகங்களையும் உயர்ந்த பொன் ஆக்கு வதுபோலச் சாதாரணமான பொருள்களையும் எவரும் விழைந்து வியந்து நோக்கும்படி கவிகள் புனைந்து காட்டுகின்றன. உலகக் காட்சியில் ஒளிகுன்றி எளியனவாய்க் கிடப்பன கவிவசப்பட்டுப் புலமைக்காட்சியில் வெளிவரும்பொழுது ஒளிமிகப்பெற்று உயர்ந்து விளங்குகின்றன. இதில் ஒன்றும் இல்லை என்று இயல்பாகவே உதறித்தள்ளி உலகில் நாம் எள்ளிவிட்டுப்போகின்ற பொருள்களைக் கவிகளில் காணுங்கால் அன்பு நலம் கனிந்து இன்பவளஞ் சுரந்து அழகு மலிந்து விழுமிய நிலையில் விளங்கி அவை நம் உள்ளங்களைக் கவர்ந்து நிற்கின்றன.

புலங்களில் உழுகின்ற உழவு மாடுகளை நாம் நாளும் பார்த்தி ருக்கின்றாேம்; பல காலம் பழகியும் வருகின்றாேம்; அவற்றைக் குறித்து நாம் என்ன எண்ணி யுள்ளோம்? புதுமையாக யாதாவது புரிந்துள்ளதா? மாடு மாடாகத் தான் தெரிகிறது; ஒரு பாடும் தோன்றவில்லை. இப்பொழுதாவது சிந்தித்துப் பாருங்கள்; சிந்