பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 கம்பன் கலை நிலை

‘’ பாவம் என்றால் ஏதும் பயமின்றிச் செய்ய இங்தச்

சிவனுக்கு யார் போதம் தெரித்தார் பரா பரமே!’

என்று சீவர்களுடைய பாவங்லையை வியந்து தாயுமானவர் இங்ஙனம் இாங்கியிருக்கின்றார். பொய் சொல்லாதே ; பிறர் மனைவியாை கயவாதே களவு செய்யாதே என்று இவ்வாறு போதித்தற்குக் கலாசாலைகளும் குருகுலங்களும் நாளும் பெருகி வரினும் மக்களிடம் நல்ல பலனைக் காணுேம். பொய்யே பேசு; பிறர் இல்லை விரும்பு ; புறங்கூறு என இவ்வகைய படிப்பினையை யாண்டும் சொல்லிக் கொடாமலே எல்லாரும் அவற்றில் வல்லவ ாய் விளங்குகின்றனர் ; என்னே இது ? என்று மனிதனது பொல் லாக இயல்பை கினேந்து ஆச்சரியப்பட்டிருக்கும் இப்பாட்டின் தத்துவநிலையை உய்த்துணர்ந்து கொள்க.

கள்வர் என்றதற்கு ஏற்பத் தொழிலின் தீமையைத் தொடு த்துச் சுட்டினர். கசடு=குற்றம். - வசிட்டன் என்ற சொல் வின் எதுகைக்கு இசையக் கசடும், அசடும் ஒற்றிாட்டிவல்லொலி பெற்றுவந்தன. பகங்களைக் கம்பர் பதப்படுத்திக்கொள்ளும் விதங்கள் பல. சொல்லும், பொருளும், இலக்கணங்களும் இவர் வாக்கை நோக்கியே வளைந்து குழைந்து வணங்கி நிற்கின்றன.

ஐவரை அறுவர் ஆக்கிய என்றது ஐம்பொறிகளையும் அடி யோடு வென்றவர் என்றவாறு. பொறி வசப்பட்டு மனம்போன படிபோகாமல், அவற்றை அறிவின் வயப்படுத்தி அடக்கி கின்ற அருந்தவன் என்பதாம்.

பொறிவாயில் ஐந்து அவித்தான் ” (குறள் 6).

எனப் பாமனைக் குறித்து வந்திருக்கும் இந்த அருமை வாச கம் ஈண்டுச் சிந்திக்க வுரியது.

=*

(-மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் பொறிகள் வாயிலாக விளேகின்ற ஆசைகளை முற்றும் அறுத்தவர் என்பதை இங்ாவனம் குறிக்கிருக்கிறார். அறுவர்=அற்றவர்; அதாவது இல்லாதவர் என்க. அறுவர் என்னும் இவ்வினைப் பெயரை எண்ணுப் பெய ாகவும் எண்ணி, ஐந்து பேர்களை ஆறு பேர்களாக ஆக்கியவர்

என ஒர் விந்தையான பொருளும் காணும்படி இங்க வாக்கியத்தை அமைத்திருக்கிறார். சிற்சில இடங்களில் சொற்களோடு நம் கவி யாசர் உல்லாசமாக இப்படி உவந்து விளையாடுகின்றார்.