பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 கம்பன் கலை நிலை

இவ்வளவென்று இங்கே அளந்து சொல்லமுடியுமா ? வியந்து கொள்ள வேண்டியதே.

(புனிதமான இங்க ஆன்ம சக்தி ஒவ்வொரு மனிதனிடத்தும் உள்ளேபுகைந்து கிடக்கின்றது. ஏகதேசமாய் இத்தகைய கிவ்விய மனிதரிடக்கே வெளிப்பட்டு அது செழித்து விளங்குகின்றது.)

முனிவர் தாண்டிய படியே இவ்ஆண்டகைவிாைந்து யாகக் அக்கு வேண்டிய எல்லாப்பொருள்களையும் ஒல்லையில் தொகுத் தான். ‘நல்ல ஒசையில் வேள்வியைத் தொடங்கினர். பல்வகை உபகரணங்களும் கிறைந்து யாகசாலை அதிசய நிலையில் துதிசெய்ய கின்றது. அரசனும் அரிய நோன்புடன் ஒருமையுற்றிருந்தான் ; அருமறை முனிவர் பலரும் கருமமே கண்ணுய்த் தருமசிங்தை யுடன் அருகமர்ந்து செயலாற்றி வந்தனர். புதல்வசைக் குறித்து மந்திர முறையோடு ஆகுதிபெய்து முனிவர் ஒமம் செய்தார். உரிய பருவம் வாவும் யாககுண்டத்திலிருந்து தெய்வீகமான ஒரு செம் பொற்கலம் வெளியே வந்தது ; அகில் அமிர்தமயமான பாயசம் நிறைந்திருந்தது. அதனைக்கண்டதும் முனிவர்முதல் அனைவரும் அதிசயித்த உவகைமீக் கொண்டார். அந்த அவியமுதை மன் னன் கையால் எடுத்துத் தம் மனேவியர் மூவருக்கும் முறையே வழங்கும்படி மாதவர் சொன்னர். அவ்வாறே கோசலை கைகேசி சுமித்திரைகளிடம் தசரதன் கொடுத்தான். அாசன் அன்று அவி கொடுக்க மாட்சியைக்குறித்துக் கவி கொடுத்திருக்குங்காட்சிகளை அடியில் காண்க.

அரசன் கோசலைக்கு அமுது அளித்தது.

மாமுனி அருள்வழி மன்னர் மன்னவன் துரமமென் சுரிகுழல் தொண்டைத் துரயவாய்க் காமரொண் கெளசலை கரத்தின் ஒர்பகிர் தாமுற அளித்தனன் சங்கம் ஆர்த்தெழ. (1)

கைகேசிக்குக் கொடுத்தது.

கைகயன் தனையைதன் கரத்தும் அம்முறைச் செய்கையின் அளித்தனன் தேவர் ஆர்த்தெழப் பொய்கையும் நதிகளும் பொழிலும் ஒதிமம் வைகுறு கோசலே மன்னர் மன்னனே. (R

9

)