பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 கம்பன் கலை நிலை

H

தென அக்கட்டழகன் வடிவைக் கட்டிக் கழுவி உள்ளங்களிக்க

இங்ஙனம் உரைத்திருக்கிரு.ர். ... “

“ஒருவன் என்றது ஒப்பற்றவன் என்றவாறு அறிவு குணம் ஆறறல்களில் எவரும் கனக்கு கிகரில்லாகவன் என்பதாம். தன்னிகரில்லாத் தலைவனே யுடைத்தாய் ‘ என்ற இலக்கண விதிப்படி ஒரு காவியம் சரியான உயர்நாயகனத் தனக்கு உரி மையாக அடைந்திருந்தால் அது காவிய நாயகமாய் யாவரும் போற்ற உத்தம கிலையில் ஒங்கி ஒளிரும் என்பதை இராமாயணம் நமக்கு உணர்த்திவருகின்றது. அவ்வரவு கிலையை உரிமையுடன் வெளிப்படுத்தி இடையிடையே கவி களிப்புறுகின்றார்.

புெதல்வர் நால்வருள் முதல்வனை இராமனே க் தனது உயி ாாகத் தசரதன் கருதியிருந்தான் என்பதை இதில் தெளிவாக விளக்கியிருக்கிறார். அவனுடைய புத்திரவாஞ்சையும், உள்ளுருக் கமும், உயிர்க் காதலும் இதல்ை நன்கு உணரலாகும்.)

(தசரதனுக்கு உயிர் இராமன் என்பது கருத்து. அவன் உயிர் கன்னுயிர், அவன் உடல் தன்னுடல் என மன்னன் எண்ணி

H

யிருந்த மனநிலை கெரிய, ஆவியும் உடலமும்’ எண்ண வந்தன. உடல் உயிர் பொருள் யாவும் அவனே என அரசன் ஆவல் மீக் கூர்ந்திருந்தான் என்க.) உலகுடை வேங்கன் இலது என மேவினன் ‘என இதில் முரண்கொடை மேவியுள்ள நயம் காண்க. |எல்லா உடைமைகளும் எவன் உண்மையால் இனிமை பயக்

|துள்ளனவோ அவன் இவன் என்பது குறிப்பு)

சக்கரவர்த்திக்கு உயிர்நிலை இன்னது என்பதை உலகறிய முன்னதாக இதில் உரைத்திருக்கிறார். அங்கிலைமை பின்னே தெளிவாகக் கெரியலாகும்.

தான் பிறந்த குடி வறந்து போகாமல் வழி வழியே சிறந்த கிலையில் உயர்ந்து வரவேண்டுமே என்று உள்ளம் கருதி இன் வள்ளல் உருைந்ததும், உறுதி தெரிந்து ஊக்கி முயன்றதும், அதன் பயனுக வேள்வியில் தெய்வம் வந்து கைதக்கருளியதும், கருமநலனும், பிறவும் இதில் உணர்வு நலம் பயந்துள்ளன.