பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



கவியின் பெருமை

29


இன்னவாறே என்ன என்ன விதமாகவோ நம் உள்ளங்களைத் திருத்தி, உணர்ச்சிகளைக் தட்டி எழுப்பி உயிர்களைக் கவிகள் பசவசப் படுத்தி விடுகின்றன. இதனால் கவிகளினுடைய கனிவும் கவினும் வசீகரத் தன்மையும் இன்பநலன்களும் நன்கு புலனாம்

மூல முதல்

மனித வாழ்க்கைக்கு உயிராதாரமாயிருப்பது பாஷை; அந்தப் பாஷைக்கு உயிராதாரமாயுள்ளன நூல்கள்; அந்நூல்களுக்கு உயிரா தாரம் கவிகள்; அக்கவிகளுக்கு உயிராதாரமாயுள்ளவர் புலவர்கள் ஆகவே புலவர்கள் இலரேல் கவிகள் உளவாகா; கவிகள் இலவேல் நூல்கள் இலவாம்; நூல்கள் இல்லையேல் பாஷை பாழ்படும். அது பாழாகவே மனித வாழ்வு பாழாம். இவ்வுண்மையை இங்கே ஊன்றி யுணர வேண்டும். இங்ஙனம் மக்கள் வாழ்க்கைக்கு உயிராதாரமா யுள்ள மொழியை வளம்படுத்தி, உணர்வொளி உதவி விழுமிய நிலையில் அருள்புரிந்துவரும் புலவர்களை ஒருநாடு போற்றி வரா திருப்பின் அது எவ்வளவு நன்றி கெட்ட செயல்? அந்நாடு பீடு பெறுமா ? காடாய்க் கழிந்துவிடும் அன்றாே ? அருமை அறியாதயர்வது உலகியலுக்கு ஒரு தனி இயல்புபோலும்? கார்மழை பொழிந்து, கதிர் உதித்து, வார்புனல் சுரந்து மாந்தரை வாழ்வித்துவரினும் அவற்றின் மாண்பினை மதியாது மயங்கி வருதல்போல் புலவர் மாண்பையும் உலகமக்கள் புலன் கொள்ளாதுள்ளனர்.

“வானும் கதிரும் மதியும் நதியுநேர்
மானும் புலவர் மதி.”

என்றபடியே முதுநீருலகில் புதுநீர்மை பயந்து புலவர்கள் பொதுமை எய்தி யிருக்கின்றார், அருமை தெரிந்து பேணின் அறமாம்.

இதுகாறும் கூறிய வாற்றால்-புலவர் உயர்வும், மொழியின் இயல்பும், கவிநிலையும், அதன் அருமை பெருமைகளும், அறிவமைதிகளும் ஒருவாறு அறிய வந்தன.

இக்ககைய கவிகளை இயற்றவல்ல கவிஞரெல்லார்க்கும் தலைவராய்க் கவிச் சக்கரவர்த்தி எனச் சிறந்து நிற்கும் கம்பரது கலைநிலையை இனிமேல் கண்டு மகிழ்வோம்.

இவருடைய சொந்தச் சரித்திரத்தைச் சிறிது தெரிந்துகொண்டு பின்பு இராமசரிதையுட் புகுவோம்.