பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 கம்பன் கலை நிலை

என இக்கோவினது நிலைமையைக் குறித்து முன்னம் சொல்லியிருப்பதை இங்கே அனுபவத்தில் கவி நன்கு விளக்கிக் காட்டியிருக்கிறார் ஒர் இடத்தில் காம் சொல்லியிருக்கும் குறி ப்பைப் பல இடங்களிலும் வெளிப்படுத்தி அதன் கிலைமையை அழகாக விளக்கிக் கவி தெளிவுறுத்திச் செல்லுங் கிறம் காவிய முழுவதிலும் கண்டு களிக்கவுள்ளது. கவிஞர்களுடைய இக் தகைய வித்தக நிலையை, கா.அன் நாட்டித் தனது கிறுப்பே’ என்பர் இலக்கண நூலார். o

தசரதனுடைய உயிர் இராமனே என்பதை நம் நினைவில் நிலைபெறச் செய்து அவ்விருவர் நிலைகளையும் மேல்வரும் நிகழ்ச் சிகளையும் குறிப்பாக இங்கே உணர்த்தியிருக்கிறார், !

முனிவர் அரசனேடு பேசும்பொழுது உபயோகித்திருக்கும் உவமைகள் உய்த்துணரக் கக்கன. ( கவம் செய்வோர்கள் வெருவாச் சென்று அடைகாம வெகுளி என கிருதர்’ இடையே வந்த என் வேள்வியைக் கெடுக்கின்றனர் என்னும் இதில் தமக்கு நேர்ந்துள்ள இடையூற்றை இவர் எடை தாக்கிக் காட்டுகின்றார், வேறு உவமைகள் கூருமல் இங்கே காமவெகுளிகளைக் கூறியது மிகவும் அதிசயமாயுள்ளது. சொல்லக் கருதிய பொருளைத் தெள்ளத் தெளிய விளக்கிப் பிறர் உள்ளங் கொள்ளச் செய்வ தற்கே உவமையை அறிஞர்கள் உபயோகிப்பது. இங்கே சொல்லுகின்றவர் முனிவர் ; கேட்கின்றவன் அரசன். அவனு க்குக் தெளிவாக நன்கு தெரியும்படி தம் கருத்தை அவர் விளக்க வேண்டும். காரிய சாதனையில் கண்ணுான்றிக் கம் கருமம் கை கூடுமாறு பேசி வந்தவர் தமக்கு நேர்ந்துள்ள அல்லல் நிலையின் எல்லையை அளவு காட்டி அரசு ஒர்ந்துகொள்ளும்படி சொல்லு ன்ெருர்.

வலியவர் மெலியவரை அடிப்பதுபோல், சிங்கம் யானையைப் பிடிப்பதுபோல், புலி பசுவை வதைப்பதுபோல், பூனே எலியைக் கொல்லுவதுபோல், கிருகர் என்னே அல்லற்படுத்துகின்றார் என இன்னவாறு எதாவது வெளிப்படையாக ஒரு உவமையை எடுக் துச் சொல்லியிருக்கவேண்டும் , அங்ஙனம் யாதும் சொல்லாமல் தவசிகள் மனத்தையும், காமவெகுளிகளையும் இணைத்துக்காட்டி யிருக்கிறார், இவை மன் னனுக்கு எப்படித் தெரியும்? அவன்