பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312 கம்பன் கலை நிலை

மனிதன் எவ்வளவு இரகசியமாக மறைத்து வைத்திருக்கா லும் கன்னுடைய குற்றங்கள் தன்னை யறியாமலே பேச்சு மூலம் பலவறிய வெளிப்பட்டுவிடும் என்பதை முனிவர் மொழிகள் இங்கே உணர்த்தி கிற்கின்றன.

கேட்கின்றவனுக்கு எளிதாகப் பொருள்விளங்கும்படி உலக நிலையில் தெளிவான உவமையை உரையாமல் மிகவும் துணுகிய அரிதானதை உரைத்தது முனிவாத சொந்த அனுபவ நிகழ்ச்சி யாதலின் முந்துற இங்கனம் வந்ததென்பது தெரிக்கோம்.

இனி அந்த உவமை சுட்டிகிற்கும் பொருளையும், அதன் இயல்

பையும் உய்த்து நோக்குவோம்.

வேள்விக்கு இடையூறு செய்துவருகின்ற அாக்கர்கள் பலர், அவருள் சுபாகு மாரீசன் என்னும் இருவரும் கலைசிறந்தவர். உடன் பிறந்தவர். அண்ணனும் கம்பியும்ஆகிய அவ்விருவருக்கும் காமமும் வெகுளியும் முறையே ஒப்பாய் வந்தன.

காமம் என்பது பெண் பொன் முதலியவற்றின்மேல் கலித் தெழும் ஆசை. அக்க ஆசைக்கு வெகுளி அருந்துணையாகும். தன் இச்சை எங்கே தடைப்பட்டதோ அங்கே தான் மனிதனு க்குக் கோபம் உண்டாகும். ஆகவே காமமும் வெகுளியும் முன் னவனும் பின்னவனும் போல் யாண்டும் பின்னி மன்னியுள்ளன. இன்னவாறு இவை உறவுகொண்டுள்ளமையான் உரிமையான அக் துணைவர் இருவருக்கும் ஈண்டு உவமையாயின.)

(மடமை மலிக்க மயக்கமே காம வெகுளிகளுக்குப் பிறப்பி டம் ஆதலால் அது சுபாகு மாரீசர்களுக்குக் காயான தாடகை யைக் குறித்து கின்றது. ஆகவே காமம் வெகுளி மயக்கம் என லும் மூன்று தீமைகளும் உயிர்களுக்கு எவ்வாறு கேடுபுரிந்து வருகின்றனவோ அவ்வாறே சுபாகு மாரீசன் தாடகை என்னும்

மூவரும் முனிவருக்கு இடர் புரிந்து வந்தனர் என்பது பெற்றாம்.

குரோதம், பொருமை, மகம், மாம்சரியம் முதலிய தீக்குணங் களைப்போல் தீய அாக்கர்கள் வேறு சிலரிருப்பினும் அவருளெல் லாம் தலைமை வாய்ந்து கொடுமை மிகுந்திருத்தலால் தாடகை முதலிய மூவரும் ஈண்டு யாவரிலும் முக்கியமாய்க்கூற கின்றனர்.