பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

814 கம்பன் கலை நிலை

இராமனேக் கா என்று முனிவர் சொன்ன சொல் தசரதனு க்கு உயிர் வேதனையாய் ஒங்கியுள்ள நிலையை இது உணர்த்தியுள் ளது. முனிவர் சொல் அரசன் செவியில் புகும்பொழுதே உள் ளம் துடித்து உயிர் பதைத்துத் துயர் உழந்தான் என்பது உவ மையால் உணர கின்றது.

ஒருவன் மார்பில் கூரியவேல் ஒன்று பாய்ந்து கொடிதாய்த் தளேத்துப் போயது ; அக்கப் படுகாயம் சிறிது ஆறிக் கொதி புண்ணுய்க் குழைங்கிருந்தது; அப்புண்ணில் நெருப்புக்கட்டியைக் கொண்டு வந்து ஒரு முரடன் புகுத்தில்ை அந்த மனிதன் எப் படிக் தடிப்பானே அப்படி முனிவன் சொல் கன் காதில் பட்ட பொழுது தச கன் துடிக்கான் என்பது, ‘ புண்ணில் ஆம் பெரும்புழையில் கனல் நுழைந்தால் எனச் செவியில் புகுதலோ டும் உயிர் துயர் உழக்கான்’ என்ற கல்ை உண வந்தது. */

புண்ணில் ஒரு ஈ வந்து ஒட்டினலும் வேதனை சகிக்க முடி யாது. அதில் தீயைத் திணித்தால் அவ்வுயிர் என்ன பாடு படும்? இதனேக் கொஞ்சம் ஈண்டு எண்ணி நோக்கவேண்டும்.

(புண்புழை என்ற கல்ை மன்னன் மனத்தில் முன்னமே ஒரு இன்னல் படிந்துள்ளது என்று தெரிகின்றது.

நீண்ட காலமாக மலடிருந்து மிகவும் அருமையாகப் பெற்ற பிள்ளை ஆதலால் அந்த அழகனக் காணுந்தோறும் உள்ளம் பூரி க்து அரசன் உவகை மீ.க்கூர்ந்து வக்கான். வரினும் கவலையும் இடையே கலித்து வந்தது. என்ன ? ஒரு பொருளின்மீது காகல் அதிகமாயின் அதற்கு ஏதும் ஏகம் நோா வகை ஆகாவுடன் பேணி வருவதும், அபாயங்கள் இல்லாத இடங்களிலும் ஐய முற்று அலமருகலும் மனித இயல்பு; அங்கிலைமையில் இராமன் மேல் தசரதனுக்குப் போவலும், பெருங் கவலையும் பெருகி வங் தன ஆகலால் அங்க எண்ணத்தின் அவல நிலை புண்ணுகவும், முனிவசது துனிமொழி அதில் புகுந்த கனலாகவும் கருத கின் றன என்க. T

சாப நினைவின் தாப நிலை.

இன்னும் ஒரு இரகசியம் இங்கே எண்ணவுள்ளது. என்னே

அது ? எனின், பின்னே காண்க. தசரதன் ஒரு சமயத்தில்