பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 கம்பன் கலை நிலை

அவர் யாதும் தேருமல் புத்திர சோகத்தால் பொறி கலங்கி, எம்மைப் போல் புதல்வனைப் பிரிந்து நீ சாகக்கடவாய்’ என்று சாபம் கொடுத்துவிட்டு உடனே உயிர் ஒழிந்துபோர்ை. கிகழ்ச் சியை நினைந்து நெடுந்துயரடைந்து இவன் கெஞ்சம் கலங்கி நீங்கி வந்தான். அவரது சாப நினைவு இன்டமும் துன்பமும் இசைத்து வந்தது. அப்பொழுது மகப்பேறின்றி மலடனுய் இவன் மறுகி யிருந்தான் ஆதலால் அவர் உரையால் பிள்ளை உண்டாம் என்னும் மகிழ்ச்சியும், பின்பு பிரிவுற நேருமே என்ற கவற்சியும் உள்ளே பெருகி வந்தன. அவ்வாவில் புதல்வர் தோன்றினர் ; முதல் மகனைக் கானும் தோறும் கரை காண மகிழ்ச்சியில் களிப்புறு ன்ெற இவ்ன் பிரிவு நினைவும் இடையிடையே தோன்ற உள்ளம் உருவெங்கான். ஆகவே அந்த உள்ளத்துயரம் மருமத்தின் எறி வேல் பாய்ந்த புண்ணுய் என்றும் இடம் பெற்றிருந்தது. இன்று வந்து முனிவர் சொன்னசொல், அந்தப்பழம் புண்ணின் புழையில் கொழுங்கனல் நுழைந்ததுபோல் மிகவும் கொடுத்துயரமாய் இவன் செவியில் புகுந்த தெ ன்க. மருமம் =மார்பு.

(அரசனது துயர நிலை தெரிய உரை செய்துள்ள இவ்வுவமை மிகவும் பயங்கரமானது. புண்ணில் கனல் நுழைந்தது” என் பதை எண்ணும்போதெல்லாம் நெஞ்சம் எரியுற்றதுபோல் பரி வுற்று கடுங்குகின்றது,

முன்னுற முனி மொழிக்கு இன்னவாறு ஒப்பு உரைத்துப் பின்னர் அவ்வுரையால் அரசன் அடைந்த துன்ப நிலையை

வேறொரு உவமையால் விளக்கியிருக்கிரு.ர்.

பிறவியிலேயே குருடனுயிருக்க ஒருவன் இடையே கெய்வக் திருவருளால் கண்கள் வாப்பெற்றான்; வரவே பல்வேறு வகைப் பட்ட உலகக் காட்சிகளை யெல்லாம் கண்டு கண்டு களிப்புற்று is is ஆ இங்ாாள் வரையும் இந்த இன்பப் பேற்றினை இழந்திருக் தேனே’ என்று அதிசய பரவசனய் ஆராமை மீதார்க்து அக மகிழ்ந்து வந்தான் ; அங்கனம் வருங்கால் கிடீர் என்று அக் கண்கள் ஒழித்து போனல் அவன் என்ன பாடு படுவானே அன்ன வாருண படுதுயரை மன்னன் அடைந்து ம றுகிக் துடிக்கான் என்பார், கண் இலான் பெற்று இழந்தான் எனக் கடுந்துயரம் உழந்தான்” என்றார் உழத்தல்=கன் பத்தில் அழுங்கிக் துடி க்கல்.