பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 317

ஒரே படியாய்ப் பிறவிக் குருடனகவே இருந்து வந்தால் அவனுக்கு யாதொரு துயரமும் கோன்றாது ; இயற்கை வழக்க மாய் இசைந்துபோம் ; கண்ணேக்காட்டி மறைத்த பொழுதுதான் கடுங் துயரம் உண்டாம் ; அதுபோல், மலடகைவே இருந்துவிட் டால் மன்னனுக்கு இன்னல் ஏதும் தோன்றாது ; (அருமை மக! வைப் பெற்று உரிமை மீக்கூர்ந்து கண்குளிரக்கண்டு உளமகிழ்ந்து வருங்கால் அவனே இடையே பிரிய நேரும்பொழுது உயிர் பிரிய சேர்ந்ததுபோல் பெருந்துயரம் உண்டாயது என்க.

கண் இலான் பெற்று இழக் கான் ‘ என்ற இந்த வாக்கி யம் முன்னம் குறிக்க கதையையும் குறிப்பாக நோக்கி நிற்றலைக் கூர்ந்து நோக்குக. அந்த அந்தகர் கம் மைந்தனே இழந்தபோது மறகிக் துடித்து உயிர் பதைத்து உலைந்து போனதுபோல் அவ சாபத்தை எற்றுள்ள இந்த வேங்கனும் பதைத்து நொந்து பரிதபித்தான் என்பதாம். பழவினைத்துயரின் அளவு கிலை அறிக..

ஆவி அகத்ததோ ? புறக்தகோ ? என்னும்படி அரசன் உயிர் ஒரு கிலேயின்றிப் பெரிதும் அலமந்து மறுகி அலைந்தது ஆதலால்

ஆருயிர் நின்று ஊசல் ஆட ‘ என்றார்.

ஆர் உயிர் என்றது வீரம் மானம் வாய்மை வண்மை முத விய அருமைப் பண்புகள் யாவும் நிறைந்த அரிய உயிர் என்ற வாறு. அன்ன மேன்மையுடைய அது இன்னவாறு இன்னல் உழந்ததே! என இாக்கத் தோன்ற வந்தது.1

பொறுக்க முடியாத துயரம் நெஞ்சில் புகுந்தால் உடலில் உயிர் இருக்கமுடியாமல் பாகவிக்கும் ஆதலால் அப் பரிபவ நிலை மையை ஊசல் ஆட என்ற கல்ை உணர்த்தியருளினர். ஆயுள் முடியாமையால் வெளியே ஒரே அடியாய் ஒடிப்போகவும் முடிய வில்லை , துயரம் கள்ளுதலால் உள்ளே அமைதியாய் இருக்கவும் இடமில்லை என்பதாம். ஊஞ்சலில் தொடர்ந்து கட்டியுள்ள கயிறு அறுந்து போனலொழிய அகன் ஆட்டம் கில்லாது ; அல் து அதனேயாரும்ஆட்டாது இருந்தாலும் கனியே அைைசயாமல் அமர்க்கிருக்கும் ஆகலால் வாழ்நாள் வலியாலும் துயரின் நலிவா லும் ஒரு நிலையுமின்றி மிகவும் கொல்லையுறும் உயிர்க்கு ஊசலாட் டம் இங்கே உவமையாகச் சொல்ல நேர்ந்ததென்க.