பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

818 கம்பன் கலை நிலை

துயரம் உந்த, உயிர் ஆட என்ற கல்ை உள்ளம் துடித்து உயிர் பதைத்த பரிதாட கிலைமைகள் உணரலாகும்.) பிள்ளையின் பிரி வுரை செவியில் விழவே உயிர் மறுகித் துயர் தலைமீறி உடலை விட்டு வெளியே போவதும் வருவதுமாய் ஆவதொன்றும் அறியா மல் சாவதாக மன்னன் தத்தளித்துக் கவித்தான் என்பதாம்.

(அல்லலே ஆற்றமாட்டாமல் இவ்வாறு அஞ்சி அயர்ந்தமை யால் இவன் நெஞ்சுரம் இல்லாதவனே ? எனின், யாண்டும் எத |ற்கும் அஞ்சாக மேனே ஈண்டு இங்கனம் ஆனன் என்க. இவ னது இயற்கையான விர கிலேயை நாம் எண்ணியறியவே, கால

வேலான் ‘

என இவனே நமக்கு இங்கே காட்டி யருளிஞர். டகால வேலான் என்றது காலன் போன்ற வேலினை யுடையவன் என்ற வாறு. காலன் எழுந்தால் உயிர்கள் எவ்வாறு நாசம் அடையுமோ அவ்வாறே இவன் வேல் எழுந்தால் பகைவர் நாசம் ஆவர் என்க: கூற்றை யாரும் கடக்க முடியாது ; அதுபோல் இவனது வேலை எவரும் தடுக்க முடியாதென்பதாம். *

அத்தகைய அதிசூானைவன் இங்கே இப்படிச் சித்தம் கலங்கித் துயர் உழக்கான் என்ற கல்ை இவனது புத்திாவாஞ்சை யின் நிலைமையும், அப்புதல்வனது தலைமையும் உய்த்துணாலாகும்.

எறிவேல், காலவேல், புண்புழை, கனல் பிழம்பு, கடுங் அயாம் எனக் கோரமான சொற்களைக் கூற நேர்ந்தது கொடுமை யான துயரக் காட்சிகளை நேரே ஒா என்க. உயிர்க் குணங்களை யும் துயர்க்கூறுகளையும் இதன் கண் உள்ளம் உருக விளக்கியுள்ள நயங்கள் உணர்ந்து சிங்கிக்கக் கக்கன.

மனத்தில் எழுகின்ற விருத்தி பேதங்களையும், துன்பக் கூறுகளையும், மனித தக்துவங்களேயும் உவமை வாசகங்களால் கவி இதில் உணர்த்தியிருக்கும் திறங்கள் கலைவல்லுநர் எவரும் வியந்து போற்றவுள்ளன.

(காணங்கள் கலங்கி மர்ணவேதனையாய் அரசன் மறுகி புழங் தான் என்றதில் அவனது உள்ளத் தகவையும் பிள்ளைக் காதலை யும் தெள்ளத்தெளிய விளக்கி, தம் உள்ளத்தையும் உணர்த்தி நம் உள்ளங்களைக் கவி இங்கே உருக்கியிருக்கிறார் ஊன்றியுணர்வார் உணர்வு நிலை கலங்கி உள்ளுற இாங்கி உருகி அயர்வார்.