பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பர் சரித்திரம்

31


னும் எழுதி வையாது போயினரே! என்று சிலர் ஏங்கி நிற்கின்றார். இன்ப மயமான அந்த இராமசரிதமே கம்பர் சரிதமாய் உள்ளுறக் கனிந்து நிற்றலை உணர்ந்து கொள்ள நேர்ந்தால் அவர் தம் உள்ளக் கவலை உடனே ஒழிந்து போகநேரும். இவர் கையால் எழுதியது அடையாளத்துக்கு ஒர் எழுத்தும் காணோம்; வாய்மொழிகேளோம்; உடனிருந்தவர் சொன்னது ஒன்றும் தெரிந்திலம்: இவ்வாறிருந்தும் இவரை நாம் நேரே கண்டு கொண்டதுபோல் களிப்புறுகின்றோம்; உடனிருந்து பேசுவது போல் உவகைமிகுகின்றாேம்; அடுத்த வீட்டுக்காரராய் ஆதரித்து வருகின்றாேம்; உறவினரென உரிமை கொண்டாடி உள்ளம் குழைகின்றாேம். என்னே இது! இவர் உடல் மறைந்துபோய் ஆயிரம் ஆண்டுகளுக்குமேல் ஆகின்றன. ஆயினும் நம் வாயிலும் கண்ணிலும் எண்ணிலும் இவருடைய பெயர் உருவங்கள் பெயராது நின்று உயரின்பம் பயத்து வருகின்றன. இவரைத் தத்தம் சாதியிலும் சமயங்களிலும் வலிந்து இழுத்து வைத்து எம்மவர், எம்மவர்” என்று உறவுரிமை பாராட்டி எத்தனையோ பேர் இறுமாப்புறுகின்றனர். ஐயர், பிள்ளை முதலாக உள்ள மரபினர் பலரும் ஒரு முகமாய்ப் புகுந்து தனித்தனியே இவரைத் தம்மவர் என்று துணிந்து ஆதாரமும் கூறி ஆதரம் கூர்கின்றார். இவற்றிற் கெல்லாம் காணம் என்ன? பெரிய ஆள் என்பதுதான். அரிய பேர் பெற்றுப் பெரிய ஆள் ஆனவுடனே உறவுரிமை கூறி அனைவரும் அருகணைய ஆவலுறுகின்றார். அவரது ஆவல் அவர் கருதியபடி தவறுபடினும் உயர்வற உயர்ந்துள்ள இவரது உன்னத நிலைமையை உறுதியாக உணர்த்தி நிற்கின்றது. மனிதனுக்கு இயல்பாகவே உயர் நிலையில் பிரியம் ஆதலால் அந்நிலையில் உள்ளவனைத் தன் இனத்தான் என்று சொல்லிக்கொள்வதில் ஒவ்வொருவனும் இவ்வாறு ஆசைப்படுகின்றான். புறத்தே அபிமானம் கொண்டாடி அயர்ந்து நில்லாமல் அகத்தே உயிர்மானம்பேணி உயர்ந்து வருதல் நலம். இங்ஙனம் பழம் பெருமைக்குக் கம்பர் வளஞ் செய்து வந்துள்ளார்.

இவர் பிறந்திருந்த நாட்டில் தாம் பிறந்துள்ளதைச் சிலர் பெரும் பேறாக நினைந்து உவந்திருக்கின்றார். ஒரு முறை சோழமன்னன் ஓர் இளம் பெண்ணைக் கண்டான். அவள் திருவழுந்தூரினள், உருவ