பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320 கம்பன் கலை நிலை

சிவனும், உலகுயிர் யாவும் படைத்த பிரமனும், இந்திரனும் ஒருங்கே திாண்டு இடர் செய்யவந்தாலும் அவசனவரையும் ஒறுத்து நீக்கி யாதொரு இடரும் கோாதபடி உங்கள் யாகத்தை நான் பாதுகாப்பேன்; யாதும் ஐயுறவேண்டா ; எழுத்திருங்கள் : இப்பொழுதே நேரே போவோம் என்று முனிவரை விரைவு படுத்துகிறார் ஆதலால், பெருவேள்விக்கு எழுக ‘ என்றான்.

முனிவரை எப்படியாவது வெளியே இழுத்துக்கொண்டு போய்விடவேண்டும் ; உள்ளே இருக்க விட்டால் உயிருக்கு ஆபத்து என்று பாபாப்புடன் அவரை வெளியேற்ற அாசன் விரைந்து கின்ற நிலையை இதில் ஊன்றி உணர்ந்துகொள்க. )

-என்னனேய முனிவரர் என்று கொடங்கிய பொழுது இடை யூறு ஒன்று என்று முனிவர் சொன்ன வார்த்தை நினைவில் பதிந் திருந்தமையால் அதனையே திருப்பி இடையூற்றக்குஇடையூரு யான் காப்பன்’ என்று தடை நீக்கிக்கான் காக்கும் நிலைமையைக் தகுதியாக அரசன் எடுத்துக்காட்டி னன்.

எதிரிகள் என்ன என்ன இடையூறுகள் செய்வாரோ அவற் றிற்கெல்லாம் எடைக்கு எடை எதிர் செய்து அவர் தாமாகவே அஞ்சி இடைந்துபோகும்படி அடலமர்புரிந்து எனது உடலுயிர் யாவும் தங்களுக்கு உறுதுணையாக்கி உரிமை செய்வேன் துணி

வுடன் விரைந்து புறப்படுங்கள் என்பதாம்.

முனிவர் கிரு கரை விலக்கவேண்டினர்; அரசன் அவாள வில் கில்லாமல் அவரினும் போாற்றலுடைய அமார்களையும் விலக்கி யருள்வேன் எனத் தனது அமாற்றலை விளக்கினன்.

இந்திரன் வந்தாலும், பிாமன் ஆலுைம், சிவபெருமானே ஆயினும் போரில் நேரின் நான் அவரைப் பொருதே தீர்ப்பேன் என்ற இவனது உறுதியுரை வியப்பையும் விம்மிகத்தையும் விளைத்து உயரிய விரக்காட்சியை இங்கே உணர்த்தி நிற்கின்றது. தேவதேவர்களே இவ்வாறு எதிரிட்டுக் கேவலமாகக் கூற லாமோ? எனின், பகையாய் வரின் அவர் எவராயினும் கவருமல் வெல்லுவேன் என்று வீரமுழக்கம் செய்கின் முன் ஆதலால் அந்த வீாதேவதையின் ஆவேசத்தால் அரசன் இங்கனம் சொல்லினுன்

என்க. அளவிடமுடியாத ஆன்ம வீபம் இதில் ஒளிவிடுகின்றது.