பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 3.25

கொண்டிருக்கலால் அந்த நிலைமையில் அடியவனுக்கும் அருள் புரியவேண்டும் என்பதாம்.

‘’ சடைமேல் ஒருத்தி சமைந்திருப்ப, மேனிப்

புடைமேல் ஒருத்தி பொலிய-இடையேபோய்ச் . சங்கே கலேயே மருதற்குத் தான்கொடுப்பது

எங்கே இருக்க இவள்.

(திருவிடைமருதூர் மும்மணிக்கோவை, 23)

இது பட்டணக்கடிகள் பாடியது. இதிலும் கங்கையை இறைவனுக்கு நாயகியாகக் குறிக்கிருத்தல் காண்க. அகப் பொருள் துறையில் அமைந்து வந்திருக்கும் இக்கவியின் நுண் பொருளை துணித்து உணர்ந்துகொள்க.

நீர்வடிவமான கங்கையைப் பெண்ணுக எண்ணியது அதன் செய்வத் தன்மையை எதிர்நோக்கி என்க. ஒரு நோக்கில் ரோ கவும், மற்றாெரு நோக்கில் போமுகமைந்த மங்கையாகவும் கங்கை கனிந்திருந்தாள் என்பதைச் சிவப்பிரகாசர் நகைச்சுவை ததும்ப

வெளிப்படுத்தி யிருக்கிரு.ர்.

ஒரு முறை உமையுடன் உல்லாசமாகச் சிவன் உவந்து விற் றிருக்குங்கால் கலையில் மறைத்து வைத்திருந்த கங்கையைத் தேவி யார் கண்டு கொண்டார்; கொள்ளவே, இது என்ன? பெண் உரு வம் ‘ என்ற திகைத்து வினவினர். வினவவே, பாமன் உளமிக நாணி எவ்வளவோ ஒளித்துரைத்தும் உண்மை வெளிப்பட நேர்ந் தது; கோவே அஞ்சிப் பயங்து கன் பிழையைப் பொறுத்தரு ளும்படி தேவியைக் கெஞ்சி நின்றன். அந் நிலைமைக்கு இாங்கிச் சக்களத்தியாகக் கங்கையை உமை தழுவிக்கொண்டாள் என அவர் உரை த்திருக்கும் கவி ஒன்று அடியில் வருவது காண்க.

‘ ஐய! நின்சென்னிமிசை உறைகின்ற மடமங்கை

யார் ? என்ன உமை வினவவும், அன்னதொரு மடமங்கை அன்று; வெண்திரை கொழித்து

அழகொழுகு தண் புனல் எனத், துய்யஒளி ஆனனம் கரியவிழி காதுவாய்

தோயத்தில் உண்டோ ? என ச், சொல்லரும் கமலமலர் காவிமலர் கொடிவள்ளே

து.ாயசெங் குமுதம் என்னப்,