பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

கம்பன் கலை நிலை


நலமுடையவள். அரசன் அவளைப்பார்த்து நீ எந்த ஊர்? என்றான். அதற்கு அவள் உடனே,

“கம்பன் பிறந்தவூர் காவிரி தந்தவூர்
கும்பமுனி சாபம் குலைந்தவூர்-செம்பதுமத்
தாதகத்து நான்முகனும் தாதையும் காணாத
வேதவித்து வாழும்அழுந் தூர்.”

என்று பாட்டிலேயே பதில் சொன்னாள். மன்னன் கேட்டு மகிழ்ச்சி யடைந்தான். “கம்பர் இருந்து வாழ்ந்த மண்வாசி அல்லவா இந்தப் பெண்ணும்கூட இவ்வண்ணம் கவி பாடினாள்” என்று வியந்து புகழ்ந்து பொருளும் உதவி அவளை அனுப்பினான்.

அழுத்தூர் என்பது இவர் பிறப்பினல் சிறப்படை பெற்றுத் திருவழுந்தார் என்று வந்தது. அவ்வூர் சோழமண்டலத்தில் மாயூரம் எல்லையில் உள்ளது. -

இதனால் அந்நாட்டிலுள்ள ஆண் டெண் அடங்கலும் இவரது உரிமையை எவ்வளவு பெருமையாகப் பேணி வந்திருக்கிறார்கள் என்பது நன்கு அறியலாகும்.

இங்ஙனம் ஊரும் நாடும் உலகமும் உறவுகொண்டாடி உரிமை கொள்ளும்படி பேரும் பீடும் பெற்றுப் பெருகியுள்ள இவரது சரித் திரம் இவர் தோற்றம்போலவே ஏற்றவாறு தோன்றாதிருக்கின்றது.

அரசகுலத் தோன்றலாகிய கன்னன் தனது பிறப்பு நிலையைச் சிலகாலம் அறியாதிருந்தான்; பின்பு கண்ணன் வந்து உணர்த்த அவன் கண்டு தெளித்தான். நமது கம்பர் பிறப்பு நிலையோ இன்ன மும் தெளிவாக எவரும் தெரிந்திலர்.

கன்னனும் கம்பனும்

“கன்னன் பிறப்பும் பின்னுளில் துலங்கிற்று கம்பன்பிறப்பு
இன்னம் தெரிந்தார்கள் இலையில்லை முக்காலும் இது
                                                            மெய்ம்மையே.”

என்று முருகதாச சுவாமிகள் தமது புலவர் புராணத்தில் இவ்வனம் ஆணையிட்டுக் கூறியிருக்கின்றார். இவ்வாறு இவரது சரிதம் தெரிவரிய நிலையில் உள்ளது. ஆயினும் ஒரு முடிபாக அறிஞர் சிலர் ஆராய்ந்து தெரிந்து உறுதிசெய்திருப்பது மேலே வருவது: