பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறப்பு நிலை

33


கம்பன் என்பான் வீரவர்மன் என்னும் ஒரு குறுநில மன்னனுடைய அருமைத் திருமகன். அம்மன்னன் மாற்றலர் சதியால் மாண்டு போனான். மாளவே அவ்வமயம் பூரண கருப்பிணியாயிருந்த அவனுடைய இனிய மனைவியான அம்பிகா என்பவளும் உடன் மடியத் துணிந்தாள். துணிந்தும் தன் வயிற்றுச் சிசுவை நினைந்து மறுகியெழுந்து இரவிடை பெயர்ந்து ஒரு நாள் நடந்து மறுநாள் ஒரு காளிகோவிலை அடைந்து வயாவும் வருத்தமும் மிகுந்து தனியே அயாவுயிர்த்து ஈன்றாள். அப்பேறு காலம் சோழநாட்டிலே திருவழுந்தூரிலே இரவில் நிகழ்ந்தது. பெற்ற மகனை நோக்கித் தாய் பெருமூச் செறிந்தாள். உற்ற நிலையை எண்ணி எண்ணி உள்ளம் துடித்தாள். பின்பு மெள்ள எழுந்தாள். ஈன்ற குழவியைத் தேவி முன் கிடத்திவிட்டு அயலொதுங்கி அவள் ஆவி போயினாள். சூரியன் உதயமாகவும் அக்கோவில் பூசாரியாகிய ஒச்சன் அங்கே வந்தான். குழந்தையைக் கண்டான்; வியந்தெடுத்துத் தெய்வம் தந்ததென்று விரைந்து சென்று மனைவியிடம் கொடுத்து மகிழ்ந்திருந்தான். அவன் காளி உபாசகன். ஆதித்தன் என்னும் பெயரினன். நல்லகல்விமான். அவனுக்கு முன்னதாகப் பிள்ளை இல்லாமையால் இக்குழந்தையை மிகவும் விழைந்து வளர்த்து வந்தான். உரிய பருவம் வரவும் இயன்றவரையும் கல்வி பயிற்றுவித்தான். வயது பதினாறு அடைந்தது. தாம் பிறந்த இடமாகிய அக்காளி கோவிலுக்கு ஒரு நாள் காலையில் இயல்பாகவே இவர் தனியே போனார். அருமை மகனைக் கண்ட உரிமைத் தாய் போல் காளி தேவி இவர் முன் களிப்போடு பிரசன்னமானாள். இவர் பேதுற்று நின்றார். பின்பு தெளிந்து புதிய வுணர்வுடன் அதிசய முற்று அவசமீக்கூர்ந்து அருள் வயத்தராய் நேசமிகுந்து தேசுமிகப் பெற்றார். தெய்வ வொளி உள்நின்று இயக்கினமையால் இளமையிலேயே இவர் திவ்விய கவியாய் விளங்கினார். இவரது உள்ளமும் உணர்வும் உயர்நிலையில் ஒங்கி உலகமெலாம் நலமுற ஒளி பெருகி வந்தன.

சடையப்பரைச் சார்ந்தது

அக்காலத்தில் அவ்வூரயலேயுள்ள திருவெண்ணெய் நல்லூரில், சடையப்ப பிள்ளை என்னும் பேருடைய வேளாண் குலத் தலைவர்