பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 345

‘தாணி புட்டில் அம்பருத் தாணி ‘ என்றது. பிங்கலங்கை. எடுக்க எடுக்கக் குறையாமல் மந்திர மாபுடன் தெய்வக் தன்மை வாய்ந்த அற்புதப் பகழிகள் எப்பொழுதும் கிறைந்திருந்தமை யால், ‘ என்றும் கேய்வுருத் துணி” என்றார். தேய்வின்மைக்கு வாய்மை இதில் உவமையாய் வந்திருக்கிறது.)

சக்தியம் கித்தியமானது என்றும் நிலைகுலையாமல் கின்று கிலவுவது , எதையும் வென்று விளங்குவது ; அத்தகைய உத்தம கருமத்தை ஒர் அம்புக்கூட்டிற்கு உவமை குறித்தது, அது பெற்றிருக்கும் பொருட் பெற்றியை உய்த்துணா என்க.

Lயாண்டும் குறிகப்பாமல் எதிர்த்தன எவற்றையும் எய்து வீழ்த்தி, யாதும் நிலை கவருமல் என்றும் வென்றியுடன் விளங்கி கிற்கின்ற இராமபாணங்களே மேவியுள்ளமையான் மெய்ம்மை எதிர் வைத்து மேன்மையோடு அது பேச கின்றது. )

(நல்ல நீதிகளையும், கரும நெறிகளையும் உலகினுக்கு உறுதி யாக உணர்த்துவதே காவியத்தின் குறிக்கோள் ஆதலால் இங்கே சத்தியம் இங்கனம் உாைக்க வந்தது.)

(இராமனுடைய வில் அம்பு அாணி வாள் முதலிய விர ஆயு தங்களைக் குறித்துக்கூறும்போது கூட யாரும் எளிதே தெளிந்து கொள்ளத் தக்க வுறுதி கலங்களை மக்களுக்கு நம் கவிஞர் பிரான் மிக்க ஆவலுடன் உணர்த்தி வருகிரு.ர்.)

அம்பருத்தாணியைக் குறித்து இன்னும் ஒர் இடத்தில் சொல்லியிருக்கும் கவி ஒன்று அடியில் வருகின்றது.

‘’ பல்லியல் உலகுறு பாடை பாடமைந்து

எல்லேயில் நூற்கடல் ஏற நோக்கிய 3 ( கல்லியல் நவையறு கவிஞர் காவரும் சொல்லெனத் தொலைவிலாத் துாணி தூக்கினன்.”

(உயுத்தகாண்டம், முதற்போர்ப்படலம், 114)

இராவணைேடு போர்புரிய முதல்நாள் மூண்டு எழுந்த

பொழுது இராமன் பூண்ட அம்புப்புட்டிலைக் குறித்துக் கூறிய

படியிது. (மெய்ம்மைபோல் தேய்வுறத் தூணி என முன்னம்

சொன்னர் ; இங்கே கவிஞர் சொல் எனத் தொலைவிலாத் துணி

44