பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 347

பாந்து கின்றன என்று அவன் வியந்து புகழ்ந்திருக்கும் தன்மை

so

நயந்து நோக்கவுள்ளது.

இக்கவியின் பொருள் நிலைகளைக் கருத்தான்றி உணர்ந்து

கொள்க. உரை வசையின் விரியும்.

சிெல்லியல் அம்பை நல்லியல் கவிஞர் வாக்கோடு ஒப்ப வைத்துத் தம் கருத்தைப் பற்பல வகையில் நம் கவிஞர்பிரான் இவ்வாறு வெளிப்படுத்தி யிருக்கிறார்)

இங்கனம் வில் அம்புகளுடன் போர்க்கோலம் புனைந்து வந்த இராமனைப் போலவே இளையவனும் பூண்டு வந்தான். வந்த இருவரைத் தங்தை தழுவி நெஞ்சம் துணிந்து முனிவரிடம் கஞ் சம் என்று தந்தான். அவர் உவந்து வாழ்க்கி விாைந்து விடை பெற்றுக் குமாரை அழைத்துச் சென்றார். ஞான முனிவருடன் அம்மான வீரர் போன நிலையைக் குறித்துக் கவி நயமாக விளக்கி யிருக்கிரு.ர். அடியில் வருகின்றது காண்க.

‘’ அன்ன தம்பியும் தானும் ஐயனும்

மன்னன் இன்னுயிர் வழிக்கொண் டாலெனப் சொன்ன மாதவற் ருெடர்ந்த சாயைபோல் பொன்னின் மாநகர்ப் புரிசை நீங்கினன்.

(கையடைப்படலம், 20)

(இா ாமனே ப், போலவே உடைவாள் இடைவரிந்து, தாணி யமைந்து, வில் எங்கி இலக்குவன் வந்தான் ஆதலால் அன்ன தம்பி யூம் என்றார்) (என்ன வகையிலும் எங்கிலையிலும் அம்முன்ன வன் என்னவே இப்பின்னவன் மன்னியுள்ளான் என்பது, அன்ன என்னும் சுட்டால் அறியகின்றது.) சொற் செட்டாகச் 2 யிருக்கும் இதில் அரிய பலபொருள்களே உய்த்துணருமாறு கவி விட்டு வைத்திருக்கிரு.ர். __

(முனிவர் இராமனை மட்டும் உதவிக்குக் கேட்டாசேயன்றி வேறு யாரையும் கேட்கவில்லை ; அப்படியிருக்க இங்கே இலக்கு வனையும் உடன் அனுப்பியது என்ன ? எனின், உருவும் நிழலும் போல இராமனே யாண்டும் இவன் பிரியாதிருப்பவன் ஆதலால் தானகவே பிரியமுடன் அவன் பின் போனன் என்க. பிரியாதான், பின்னவன் எனப் பெயர்களும் பெற்று முன்னவனேடு பிரிவின்