பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352 கம்பன் கலை நிலை

முடியொடு முடிபொரும் வாயில் ‘ என்ற தல்ை அறிய வங்கது. இந்தக் காட்சி மன்னனது திவ்விய மாட்சியை விளக்கி எவ்வளவு அதிசயமா யுள்ளது.

2. இந்த அற்புதக் காட்சியைக் கடந்து தாதுவர் உள்ளே புகுந்து அரசர் பிரான் முன்வந்து அடிதொழுது கின்று புகழ்ந்து போற்றி இராமலட்சுமணர்கள் மிதிலை நகரில் எழுந்தருளி யிருக் கும் கிலைமையை விழைந்து கூறினர். பின்பு கிருமணம் குறித் துள்ள கிருபத்தை எடுத்து கிருபன் எதிர் மரியாதையாக நீட் டினர்.

3. அந்த மங்கல கிருபத்தை அருகே கின்ற அறிஞன் விரும்பி வாங்கினன். வாங்கிய அதனை இருகாங்களிலும் இனிது ஏந்தி ஏந்தலை எதிர் நோக்கினன். இங்கே காரியம் நிகழ்கின்ற சீரிய கிலைகள் கருதி மகிழவுள்ளன. புலமகன் என்ற து மதிமான் என்றவாறு. புலம்=அறிவு. (வார்த்தை யாதும் பேசாமல் பார்த்த மாத்திரத்திலேயே அரசின் குறிப்பறிந்து யாவும் செய் யும் கூர்த்த மதியுடையான் என்பது புலமகன் என்ற கல்ை _ IT II வந்தது.) _ -

(அரசமரியாதையும் அறிவமைதியும் பெருமிதமும் சமுகத் தில் நடக்கும் சதுரப்பாடுகளும் இக் கவிகளில் கதிர்வீசி கிற்கின் றன. கம்பர் ஒர் அாசாாயிருக்கிருக்கவேண்டும், அல்லது போ ாசரோடு அவர் நேரே அடிக்கடி பழகியிருக்கவேண்டும் என் பதை அவருடைய வாக்குகள் யாண்டும் நன்கு காட்டி வருகின் றன. அரச கம்பீரங்கள் உரைகளில் உயிர்பெற்று ஒளிர்கின்றன. 4. கிருபத்தை வாசிக்க, இராமனுடைய திருமணச்செய்தி தெரியவந்தது. அந்த வார்த்தையைக் கேட்ட அளவில் கசாக னுக்கு உண்டான உவகைக்கு அளவே இல்லை. அம் மகிழ்ச்சி நிலையை வார்த்தைகளால் அளந்து சொல்லமுடியாது. அவனு டைய உள்ளக்களிப்பையும் உயிர்ப்பூரிப்பையும் உடலில் கிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்றால் கவி இங்கே தெளிவாக விளக்கியிருக்கிறார், அவ்விளக்கம் வியப்பை விளேத்து நின்கின்றது.

வாகுவலயம் என்பது அரசர்க்குரிய அணிவகைகளுள்

ஒன்று. அது தோளில் அணியப்படுவது. சிறந்த இரத்தினங்