பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 353

கள் இழைத்துத் தங்கத்தால் வட்ட வடிவமாகச் செய்யப்பட்டி ருக்கும் அந்த அணிக்கு அங்கதம் எனவும் பெயர். வளையமா யிருத்தலாலும், கோளில் அணிவதாலும் அது வாகுவலயம் என வந்தது. வாகு=கோள். வலயம்=வட்டம்)அவையில் அமர்க் கிருக்கும் பொழுதும், பவனி வருங்காலத்தும், உற்சவ தினங் களிலும் அாசர் அதனை விசேடமாக அணிந்துகொள்வர். மிதிலை யிலிருந்து தாதுவர் வந்த அன்று அரசர் பலர்க்கும் கசரதன் ஒருங்கே காட்சி கொடுக்கும் சமையம் ஆதலால் பூாண அலங் காாங்களுடன் பொலிவுற்று அரியணையில் விற்றிருந்தான். அங்கனம் இருக்குங்கால் மங்கலச் செய்தி வந்தது. தனது அருமைக் திருமகனுடைய சோபன உரை காகில் விழவும் உள் ளம் களித்து உடல் பூரித்தது. ஆதலால் தோளில் பூட்டியிருக்க வாகுவலயங்கள் வாய்விரிந்து கீழே வீழ்ந்தன. (பெருமகிழ்ச்சி யால் நேர்ந்த இந்த ஆச்சரிய நிகழ்ச்சியை, ! வலயங்கள்கிமிர்ந்து நீங்கிட, வயிாத் தோள்கள் மலை என வளர்ந்தன. ’’ என்று கவி வரைந்து காட்டியிருக்கிரு.ர்.) இக் காட்சி காணும் தோறும் ஒர் அதிசய நிலையமாய் மதிநலம் சுரந்துள்ளது.

அாசன் உள்ளங்கொண்ட உவகை நிலையை உலகம் அறியச் சொல்ல வந்தவர் இவ்வண்ணம் சொல்லியிருக்கிரு.ர். கருத்துக் களை விளக்குவதில் கவி காட்டும் உரைத் திறங்கள் மிகவும் குறித்து நோக்கத் தக்கன.

இவ்வாறு மகிழ்ச்சி மீக் கூர்ந்த மன்னன் சோபனம் கொண்டு வங்த அாதுவர்க்குப் பொன்னும் மணியும் அணியும் ஆடைகளும் வாரிக் கொடுத்தான். உடனே மிதிலை நகர்க்கு எழுந்தருளக் துணிந்தான். பிரயாணக்கிற்கு வேண்டிய எல்லாவற்றையும் விரைந்து ஆயத்தம் செய்யும்படி அமைச்சரிடம் பணிக்கான், உள்ளியதை அறிவிக்கும் வள்ளுவனை நேரே அழைத்து மிதிலை எழுச்சியைக்குறித்துக் குறுகில மன்னர் முதல் குடி சனங்க ளெல்லாருக்கும் தெரிவிக்கச் சொன்னன். அன்று அவன்

சொன்ன படியை அடியில் பார்க்க.

திருமணச் செய்தியைத் தேச மக்கட்குத் தெரிவித்தது.

வானவன் குலத்தெமர் வரத்தி ல்ைவரும் – == வேனில்வேள் இருந்தவம் மிதிலே நோக்கிரும் | 2,3 சேனேயும் அரசரும் செல்க முக்தென ஆனேமேல் மனமுரசு அறைகென் றேவினன்,’

45