பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/358

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 357

கெழுக்க தாளிகள் வானம் படர்ந்து எங்கும் மண்டிகின்றன ஆத லால், விண்ணும் மண்ணுலகு ஆக்கப் போனன்’ என்றார், ஆகவே அப்போக்கின் பெருங் காட்சி இதல்ை ஒருங்கே புலம்ை. இங்கனம் சென்ற படைகள் முதல்நாள் மாலையில் வழி யிடையே யிருக்க சந்திரசைலம் என்னும் மலையில் தங்கின. சக்கரவர்த்தி குடி. சனங்களோடு அன்று மலைவாசம் செய்த கிலை மையைக் கம்பர் கலைவாசம் கனியக் காட்டி யிருக்கிரு.ர். அக் காட்சிகளையெல்லாம் காண சேர்க் கால் காலம் பெரிதும் கழிய நேரும் ஆதலால் மிதிலைக்கே நாம் விரைந்து போவோம். மாதிரிக் காக இங்கே ஒன்றை மட்டும் பார்த்து விடுவோம்.

சிறங்க பூஞ்சோலைகளும், பாந்து விரிந்த சமவெளிகளும், இனிய பல ர்ே கிலைகளும் இயற்கையாக அமைந்திருந்த அம்மலை யில் மன்னர் பிரான் ஒர் அழகிய குளிர்மென் காவுள் தங்கிய பொழுது உடன் வங்க அரசர் முகலனைவரும் அவரவருக்கு ஆன இடங்களில் அயலே புடைசூழ்ந்து கமருடன் அமர்ந்திருந்தனர். எல்லாரும் செல்வச் சிறப்பினர் ஆதலால் உல்லாசமாகப் பல் வகைக் காட்சிகளையும் பார்த்து வந்தனர். அப்பார்வைகள் பல திறப்பட்டன. சில அரசிளங் குமார்கள் தமது அழகிய சிறிய இாகங்களைச் சாசலின் சமவெளிகளில் சதுருடன் ஊர்ந்து புதுமை கள் ஒர்ந்து மகிழ்ந்தனர். அங்கச் செல்லத் தேர்கள் ஒடி உலா விய சீர்மையை அடியில் வரும் பாடலில் பார்க்க.

தேர் சென்ற சீர். ‘ தெருண்ட மேலவர் சிறியவர்ச் சேரினும் அவர்தம்

மருண்ட தன்மையை மாற்றுவர் எனுமிது வழக்கே உருண்ட வாய்தொறும் பொன்னுருள் உரைத்துரைத்தோடி இருண்ட கல்லேயும் தன்னிறம் ஆக்கிய இரதம்.

(வாைக்காட்சிப்படலம், 8) இாக உருளைகளின் கலைப்பு வட்டங்கள் பொன் தகட்டால் புனேயப்பட்டிருக்கன. அவை, இக்காலத்து வண்டிச் சக்காங் களில் காணப்படுகின்ற இரும்புப் பட்டைகள் போல்வன. இன்று கரும்பொன் மிகுந்திருப்பது போல் அன்று செம்பொன் இருக் கது. கால கிலேயால் ஞாலநிலை மாறி கின்றது. குழைகொண்டு கோழி எறியும் வாழ்க்கையில் பண்டு இந்நாடு குலாவியிருந்த

தென்பதைப் பழைய நூல்களில் நாம் கண்டு வருகின்றாேம்.