பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



சிறப்புப்பாயிரம்

35


இவர் பாட நேர்ந்தார். அந்நூல் செய்யும் பொழுது இவருக்கு வயது முப்பதொன்பதாம்.

மனைவியும் மகனும்

இவரது அருமை மனைவி பெயர் தருமவல்லி. மகன் பெயர் அம்பிகாபதி. அவன் நல்ல அழகன். கல்வி யறிவிலும், சொல் வன்மையிலும், கவி இயற்றுவதிலும் வல்லவன். பாவின் சுவை கனிய அவன் ஒரு கோவை பாடியிருக்கிருன். அது அம்பிகாபதிகோவை என வழங்கிவருகிறது. அவனது அழகமைதியையும் கலையறிவையும் கண்டு அரசனும் மகிழ்ந்து அவன் பால் அன்புற்று வந்தான்.

இங்ஙனம் அருமை மகனைப் பெற்று, இனிய மனைவியுடன் இன் புற்று இவர் பெருமையுடன் வாழ்ந்து வந்தார். இவருடைய வாழ்வும் சூழ்வும் இராமசரிதம் பாடவே வளம் பெற்று வந்தன.

புறத்தோற்றக்கில் உடலமைவில் இவர் சரிதம் இவ்வளவு அறிந்தது போதும். அகச் சரிதமாகிய உயிருணர்ச்சிகள் யாவும் தெளிவாக இவர் காவியத்தில் கண்டு மகிழலாம். ஆண்டு விரைந்து போவோம்.

காவியமாகிய அந்தப் போகபூமியுள் புகுமுன் இவரைக் குறித்தும் அந்நூலைப்பற்றியும் சிறப்புப்பாயிரமாக வந்துள்ள சில பாடல்களைப் பார்த்துவிட்டு மேலே செல்வோம்.

சிறப்புப்பாயிரம்

“ஆதவன் புதல்வன் முத்தி யறிவினை அளிக்கும் அண்ணல்
போதவன் இராமகாதை புகன்றருள் புனிதன், மண்மேல்
கோதவம் சிறிதும் இல்லான் கொண்டல்மால் தன்னையொப்பான்;
மாதவன் கம்பன் செம்பொன் மலரடி தொழுது வாழ்வாம்.” (1)

அண்ணல், புனிதன், அவம் இலான், மால் ஒப்பான், மாதவன் எனக் கம்பரை உளம் உவந்து கூறி அவர் அடி தொழுது வாழ்வாம் என்று பணிவும் அன்பும் தோன்ற இதில் வரைந்திருக்கும் அமைதியை ஆய்ந்துகொள்க. இதனால் இவரது தெய்வப் பெற்றியும், செய் தவமாட்சியும் திவ்விய நிலைமையும் தெரியலாகும். வளர்ப்புத் தந்தையே இவர் தந்தையாக இதன் கண் வந்துள்ளமை அறிக.