பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 3' l

சனகன் எதிர்கொண்டது.

வந்தனன் அரசன் என்ன மனத்தெழும் உவகை பொங்கக் கந்தடு களிறும் தேரும் கலினமாக் கடலும் குமுச் சந்திரன் இரவி தன்னைச் சார்வதோர் தன்மை தோன்ற இந்திர திருவன் தன்னை எதிர்கொள்வான் எழுந்து வந்தான்.

படை பரிவாரங்கள் வந்தது.

கங்கைநீர் நாடன் சேனை மற்றுள கடல்க ளெல்லாம் சங்கினம் ஆர்ப்ப வந்து சார்வன போலச் சாரப் பங்கயத் தணங்கைத் தந்த பாற்கடல் எதிர்வ தேபோல் மங்கையைப் பயங்த மன்னன் வளநகர் வந்த தன்றே. ‘

(எதிர்கோட் படலம், 4, 5)

சம்பந்தி இருவரும் சார்ந்து சக்திக்கிருக்கும் பெருமை கூர்ந்து சிந்திக்க வுரியது. சூரியனைக் காண வந்த சந்திரனைப் போலத் தசாதனைச் சனகன் காண வங் கான் எனக் கவி இங்கே காட்டியிருக்கிரு.ர். இரண்டு பேர்களுடைய கலைமையையும் நிலைமையையும் உணர்ந்து கொள்ளும்படி இங்கனம் வாைந்து

மொழிந்திருக்கிரு.ர்.

சக்கரவர்த்தியின் படை பரிவாரங்களோடு மிதிலைப் I RT L– கள் எதிர்சென்று சேர்ந்தது, பெரும்புறக் கடல்களுடன் பாற் கடல் வந்து படிந்தது போலிருந்தது என்பதாம். ஆகவே அக் கூட்டத்தின் காட்சியும் மாட்சியும் நன்கு புலம்ை.

கங்கை நீர் நாடன் என்றது கசாதனை. நாட்டின் சீர்மை

யும் நீர்மையும் காட்டி கின்றது.

பங்கயத்து அணங்கு=இலட்சுமி. பங்கயம்= காமரை. மங்கை என்றது இங்கே சீதையை. மணப் பருவம் குறித்து வந்தது. திருமகள் வந்து கன்னிடத்தே பிறந்திருத்தலால் மிதிலா நகரம் கிருவுக்குக் காயகமாகிய பாற்கடலோடு நேர் எண்ணவந்தது. நகரின் பாப்பு சிறப்பு அழகு இனிமை வளமை முதலியன இதல்ை அறியலாகும். நகர் கடலுக்கும், சனத்திாள் வெள்ளப்பெருக்கிற்கும், குணங்கள் பாலுக்கும் ஒப்பாம்.