பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/378

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 377

வேள்வியைக் காக்கும் பொருட்டு முன்னம் கோசிகரோடு மாமன் போன பொழுது, ‘*மன்னன் இன்னுயிர் வழிக்கொண் ால் என நீங்கினன் ‘ என்றார். தசரதன் உயிர் தனியே பிரிந்து போனதுபோல் முனியின் இராமன் போனன் என அங்கே கூறி பதஞாபகத்தில்வைத்திருந்து எண்ணுாறு பாடல்களுக்குப் பின் ார் இங்கே அங்கனம் போன உயிர் மீள வந்தது எனக் கூறலா றர். கதைத் தொடர்புகளையும் காரிய வளர்ச்சிகளையும் கால நிகழ்ச்சிகளையும் யாண்டும் விருத்தம் நோாதபடி திருத்தமாகக் வி உாைத்து வரும் திறம் உவப்பும் வியப்பும் ஒருங்கே விளைத்து வருகின்றது.

(பிரித்தகோர் உயிர் என இறந்த காலத்தால் கூருமல் பிளி வது ஒர் உயிர் என்றது பொதுவான நிலையில் ஒர் புதுமை கான கின்றது. அன்றியும் இப்பிரிவிகன பின்னும் நிகழவுள்ள தென் லும் உண்மையும் இதில் உடனுணர வந்தது.)

Cதசரதனுடைய உள்ளக் காதலும் உயிர் கிலையும் பிள்ளைப் பேறுடன் பிணைத்து நம்முள்ளம் தெளிய இங்ானம் தொடர்ந்து கவி உணர்த்தி வருகின்றார்.)

இவ்வாறு உரிமையுடன் வந்த இராமனேக் கண்டதும் சேனை களங்கள் யாவும் ஊனும் உயிரும் உருகி உவந்து தொழுதன. அங்கனம் தொழுவாரெவரையும் ஒருவி, உழுவ லன்புடன் விரைந்து வந்து கங்தையின் காலில் அவன் விழுந்து பணிந்தான். பணியவே அந்த அழகன அள்ளி யெடுத்து மார்போடனத்து உள்ளங்களித்துத் தசரதன் உவந்து கின்றான்.

தன் அருமைக் குமானத் தழுவிக்கொண்டு அந்த உரிமைத் தங்கை நின்ற கிலை பிள்ளைப்பேறுடையார் எவரையும் உள்ளம்

உருக்கி என்றும் உவகை நிலையமாயுள்ளது.

“ மனுஎனும் தகையன் மார்பிடை மறைந்தன மலைத்

தனி நெடும் சிலையிறத் தவழ்தடங் கிரிகளே. ‘ என்ற இதில் அன்புநலங் கனிந்த இன்பக் காட்சி மிகவும் கம்பீரமாய் விளைந்திருக்கின்றது. உரைகளில் உணர்வொளிகள் கதம்பி கிற்கின்றன.

  • கையடைப் படலம் 20. இந்நூல் பக்கம் 347 பார்க்க.

48