பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் கவியின் இன்ப நிலை 37

ம்பர்நாட்டில் கற்பகக்கா ஒங்கு முேல் இருந்தாலும், செம்பொன் மேரு வனையபுயத் திறல்சேர் இராமன் திருக்கதையில் கம்பாாடன் கவிதையிற்போல் கற்றாேர்க்கு இதயம் களியாதே. (4)

இம்பர் நாட்டில் செல்வமெல்லாம் எய்தி அரசாண்டிருந்தாலும்,

கம்பாது கவிாலங்களை நன்கு நுகர்ந்து களித்துத் திளைத்த பாம ரசிகரான ஒரு கவிஞர் கான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ‘ என்ற உயர்ந்த குறிக்கோளுடன் பரவசமாய்ப் பாடிய பாடல் இது. இந்த உலகத்தில் சிறந்த அரச போகமும், அக்க உலகத்தில் உயர்ந்த இந்திர பதவியும் தம்பன்- கவியைப் போல் அறிஞர்களுக்கு இன்பம் கா என்ற கல்ை இவரது கவிச்சுவையின் உண்மையான உயர் நிலையும், உணர் வுயிர்களுக்கு இயல்பான இன்ப கலங்களும் ஒருங்கே உணரலாகும்.

ஐம்புல இன்பங்களும் ஆர அருளும் அவ்விருவகை அரச போகங்களையும் அவர் அதுபவிக்கும் தோறும் தேய்ந்து தேக பலம் குன்றிக் கிழமா யிழிந்து காணங்கள் களர்ந்து கழிந்தொழிய நேர் வர்; அந்நகர்ச்சிக்குரிய போகப் பொருள்களும் நகர நகா உருக் குலைந்து ஒழிந்துபோகும். அறிவில்ை நுகரும் தவியின்பமோ ஆயுந்தொறும் தொறும் இன்பம் கரும் கல்வி ‘ என்றவாறே நகருந்தோறும் இன்பம் மேலும் மேலும் சுரக்கருளும் : அதல்ை உள்ளமும் உணர்வும் உயிரும் ஒளிமிகப் பெற்று உயர்பேரின்பம் அடையும்; அவ்வின்பப் பேற்றுக்கு எதுவாய் கின்ற கவியும் யாண் டும் நிலை குலையாது நிறை சுவை யுடையதாய் மீண்டும் மீண்டும் உயிர்களுக்கு வேண்டியவாறே இன்பம் விளைத்துவரும். இங்கனம் தானும் வளர்ந்து தன்னை நுகர்த்தாரையும் உயர்க்க இன்ப நிலையில் உய்த்து என்றும் உலவாமல் கின்றிலங்கும் கவியோடு, ஒன்றும் நிலையாமல் உருவழிக்கொழிகின்ற அப்புல்லிய போகங்கள் இணே யாக நேரே எதிர்ந்து கில்லா என்க.

அரச பதத்தோடு அமையாமல் அமார் பகமும் அமிர்கமும் கவிக்கு இனே யாகா என்றது உயர்வு நவிற்சி பன்றாே ? எனின், அன்று ; என்ன ? அமிர்தம் நாவில் உண்ட வுடனே உருக்குலை தொழியும்; கவி உள்ளங்கொண்டு உணரும் தோறும் உலவா இன்

பம் பயக்கருளும்; அது உடலைக் கொழுக்கச்செய்து மயலில்

.