பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/435

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

---

434 கம்பன் கலை நிலை

4. கலைமகன் வெகுண்டபோதும், வெம்ை மயைத்தாங்கி நீதி விடாது கின்று உரைக்கும் விார்.’’ என்றது,

அறிகொன் றறியான் எனினும் உறுதி உழையிருந்தான் கூறல் கடன்.” (குறள், 638)

என்றதைக் கருதி வந்தது. உழை = பக்கம். - -

5. நல்லவும் தீயவும் நாடி நாயகனுக்கு ஒர் உயர் மருத்து வன்போல் உறுதி சூழ்ந்து உரிமையுடன் பயன் இயற்றுவர் என் பதாம். இது,

தன்மையும் தீமையும் காடி கலம்புரிந்த தன்மையான் ஆளப்படும். ‘ (குறள், 511) என்றதை நினேந்துகொண்டு பாடி யது.

_ -

_

-

அமைச்சு இயல்பைக் குறித்து வள்ளுவப் பெருந்தகை கூறியுள்ள கருத்துக்களே க் கம் கருத்தில் வாங்கிக்கொண்டு மன்னர் பிரானுடைய மந்திரிகளைக் கம்பர் இன்னவாறு மக்குக் காட்டி

யிருக்கிரு.ர். இக்காட்சி அரசின் மாட்சி அறியவந்தது.)

முஅமைச்சர் அறுபதியிைரர் என்றது அதிசயமாயுள்ளது. உயர்வு நவிற்சி போல் தோன்றுகின்றது. நாட்டிலிருந்த அறிஞர் பலரும் அாசர்பிரானுடைய அமைச்சு நிலையில் தொடர்பு கொண் டிருந்தமையால் இவ்வாறு கொகை பெருகிய தென்க

தற்காலத்தில் நமது நாடாட்சி புரியும் மன்னாது இருவகைச் சபையிலும் ஏறக்குறைய ஆயிரக்கது.நா.ற பேர்கள் ஆலோசனை யாளா யமர்ந்திருக்கலைக் கெரிந்துகொண்டால், முற்காலத்து அத்திவ்விய ஆட்சியிலிருந்த செவ்விய அமைச்சர்கள் தொகைக்கு இகமாகப் பொருள் செய்துகொள்ளலாம். -

இவ்வண்ணம் திரண்டுள்ள மந்திரிகள் கூட்டத்தில் மிகவும் தலை சிறந்தவர் எண்மர்- அவருள் (முதல் மந்திரியாய்ச் சக்கய வர்த்திக்கு எப்பொழுதும் பக்கத்திலிருப்பவன் சுமந்திரன் என்ப வன். அப்பெயரிஞலேயே அவனது உயரியல்பும், ஆலோசனைக் திறனும் அறியலாகும்.) சயந்தன், விசயன், திருட்டி, சித்தார்த் தன், அர்த்த சாதகன், அசோகன், மந்திரபாலன் என்னும் ஏழு மந்திரிகளும் சுமந்திரன் கீழ் உறுதித்துணேவாய் உரிமை எய்தி யிருந்தனர்.

முனிவருள் வசிட்டரும்,வாமதேவரும், சாபாலியரும் அமைச்சு நிலைமையில் அங்கே தலைமை யாளராய் நிலவி யிருந்தனர்.