பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/443

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

442 கம்பன் கலை நிலை

எனவரும் இதனால் விட்டவர் பெற்றிருக்கும் பேறும், விடாதவர் கெட்டிருக்கும் கேடும் அறியலாகும்.

விடுதலைக்குச் செல்வத்தைத் தலைமையாகக் குறித்தது அதன் நிலைமை நோக்கி, உலக இன்பங்கள் எல்லாவற்றிற்கும் செல்வமே மூலகாரணமாயிருத்தலால் அதனைத் தொடாமல் விட்டவரே பூரணமான துறவைத் தொட்டவராவர் என்க.

ஈண்டு என்றது செல்வம் இத்தகையது என உய்த்துணர வைத்த படி. இம்மையிடத்தே ஒழிவது, வெம்மை மிகத் தருவது, மெய்க்கதியைக் கடுப்பது, பொய்க்கதியை மடுப்பது, பொல்லாத நிலையது எனச் செல்வத்தின் எல்லா நிலைகளையும் எண்ணி நோக்கி இகழ்ந்து கைவிட்டவர் என்பதாம்.

“ஊனேறு செல்வத்து உடற்பிறவி யான்வேண்டேன் ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்”

எனக் குலசேகரப் பெருமாள் கூறியிருக்கல் ஈண்டுக் ரு கொள்ளக் கக்கது. பொய்கிலேயிலிர்த்துப் புன்மைப் படுக்கi புலைச் செல்வத்தை மெய்யுணர்வு கோன்றப் பெற்றவர் ஒய்யெண் ஒழித்து உய்தி பெறுவர் என்பது இதல்ை உணரலாகும். s - முல்லே முகை சொரிந்தால் போன்றினிய பாலடிசில் மகளிர் ஏந்த நல்ல கருனேயால் நாள்வாயும் பொற்கலத்து நயந்துண்டார்கள் அல்லல் அடைய அடகிடுமின் ஒட்டகத்தென்று அயில்வார்க் கண்டு. செல்வம் நமரங்காள்! கினேயன்மின் செய்தவமே கினே மின்கண் (சிந்தாமணி, 262:). ‘’ ஈண்டல் அரிதாய்க் கெடுதல் எளிதாகி காண்டல் சிறிதாய் தடுக்கம் பலதரூஉம் மாண்பில் இயற்கை மருவில் அரும்ப்ொருளே வேண்டாது ஒழிந்தார் விறலோ விழுமிதே. (வளையாபதி) செல்வம் நிலையற்றது என்று தெளிந்து அதனைக் கைவிட் வர் நிலையான மேன்மையை யடைவார் என இவை உணர்க்க சிற்றல் காண்க. பற்று அறின் பரமபதம் பற்றியருளும் என்பதாம்.