பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் கலை நிலை

கம்பன்

கவிச்சக்காவர்த்தி

கம்பநாடன்

கம்பகாடுடைய வள்ளல் காாணக்கொடையான் கெய்வப்புலமைக் கம்பநாட்டாழ்வார்

என முன் வந்த கவிகளில் இவர்க்குப் பெயர்கள் குறிக்கப் பட்டுள்ளன. இவற்றுடன் இராமவேழம்சேர் கம்பன், கல்வியிற் பெரிய கம்பன், கம்பர் விட்டுக்கட்டுக் கறியும் கவிசொல்லும், புவிச்சக்காவர்த்திகள் போற்றப் போங்கொளிர் கவிச்சக்கரவர்த்தி என இன்னவாறு பல பெயர்களாலும், தொடர்களாலும் இவர் எத்தப்படுகின்றார். இவற்றால் உலகம் இவரைக் கண்டிருக்கும் காட்சியும், கருதிவரும் மாட்சியும், இவரது புலமை யுயர்வும், தலைமை யியல்பும், நிலைமையும் பிறவும் கிறைதெரியலாகும்.

இவரது காவம் இற்றைக்கு ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன்னாாம். கி.பி. 880 முதல் 900 வரையும் இவர் வாழ்ந்திருத் கிறார். இளமையிலேயே இவரிடம் கல்விமணம் கனிந்திருந்தது ; ஆயினும், நாற்பது வயதுக்குப் பின்புதான் இவரது கல்விப்பெரு மையை உலகம் அறியநேர்ந்தது. இவர் வாக்கால் பாடல் பெறு வதை மக்கள் ஒர் ஆக்கமாகக் கருதலாயினர். சொல்லியது பலிக்கும் கல்லியல்பு இவர் சொல்லில் அமைந்திருந்தது; அகனல் எல்லாரும் அன்பும் அச்சமும் கொண்டு வியந்து பாராட்டி இவ ாைப் போற்றி வந்தனர். தெய்வப் புலவர் என வையம் புகழ்ந் தது. மூவேக் கரும் இப்பாவேந்தர்பால் அன்பு மீக் கூர்ந்து ஆதரித்துவந்தனர். இவர் செய்து முடித்த இராமாயணம் இருவ உங்கத்தில் கி. பி. 885ல் அங்கேற்றப் பெற்றது. அப்பொழுது இவருக்கு வயது 55. அந்த அரங்கேற்றத்தில் காதமுனிகள் முதலிய மாதவர்களும், மதிமான்களும், பெருகிலக்கிழவர்களும், குறுகிலக்குரிசில்களும், அரசர்களும் குழுமியிருந்தனர். இவரது புலமை நிலையையும் கவியின் இயல்பையும் கண்டு களிபேருவகை கொண்டு வரிசைகள் பல செய்து வாழ்க்தி கின்றனர். அதன் பின் இவர் எங்கும் பல்லக்கில் செல்லும் பவுசும் பாக்கியமும் பெற்றுப் பாமகள் அருளைப் பூமகளும் புவிமகளும் கண்டு புலந்து கொள்ள இவர் உயர்ந்து கின்று ஒளி செய்து விளங்கினர்.