பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/455

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

454. கம்பன் கலை நிலை

இறப்புஎனும் மெய்ம்மையை இம்மை யாவர்க்கும் மறப்பெனும் அதனின்மேல் கேடு மற்றுண்டோ 2 ” என்ற இந்த உறுதிமொழி மிகவும் உய்த்துணாத்தக்கது. பொருள் அழிவு, உயிர் அழிவுகளையே கேடு என்பர். அவம் றினும் பெருங்கேடு இன்னதுதான் என்பது இதில் நன்னயமாக உணர்த்தப்பட்டுள்ளது.

நாம் இறந்து போய்விடுவோமே என்பதை மறந்திருப்பதைக் காட்டிலும் கொடுமையான கேடு மனிதருக்கு வேறு ஒன்றுமே யில்லை என்னும் இது பெரிதும் வியப்பாகக் தோன்றும். இதில் என்ன கேடு உள்ளது ? கவி எவ்வளவு உருக்கத்துடன் இக்க உண்மையை மன்னன் மூலமாக உலகிற்கு உறுதிபெற உணர்த்தி யிருக்கின்றார் என்பது அங்க வாக்கியத்தின் வேகத்தை தனித்து நோக்கின் அறியலாகும்.

மனித வாழ்க்கை நிலையற்றது ; அந்த நிலையாமையின் கிலே மையை உள்ளபடி அறிந்த பொழுதுதான் உலகப்பொருள்களில் உள்ள பற்று நெகிழ்ந்து உயிர்க்கு உறுதி நாடக் தோன்றும் , அங்கனம் அறியாவழிச் செருக்கும் கி.மிரும் மேற்கொண்டு : வினேகளில் மண்டி என்றும் உய்வின்றித் துன்பக் தொடர்பில் மன்பதை இழிந்துபடநேரும் என்க.

ஊழியும் ஒயாக பாழுங் துயர்களில் படித்தமுஅதற்கு இறப் பின் மறப்பு ஒர் ஏதுவாயிருத்தலால் அது கொடிய கேடு ஆக இங்கே குறிக்க வந்தது. ஒரு மறப்பு பல பிறப்புக்களுக்கு கிலே யாய தென்பதாம்.

மாடு மனே முதலிய பொருள் நட்டங்கள் எவ்வளவு கேரி லும் அவற்றை ஈடு செய்துகொள்ளலாம் ; இம்மறவி பிறவியை விளை க்துப் .ெ ரும்பிழையாய்ப் பெருகி மேலே விளையும் கேடுக ளுக்கெல்லாம் முளையாய் மூண்டு யாண்டும் நேரின்றி நீண்டு கிற்றலால் இது பேரிழவாயகென்க.

அதனின்மேல் கேடு மற்று உண்டோ ? என்று கேட்டகல்ை இந்தக் கேட்டுக்கு நிகரான கேட்டை யாரும் எதியெடுத்துக் காட்டமுடியாதென்பது புலம்ை.