பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/479

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

478 கம்பன் கலை நிலை

கடகரிக்கழுத்தில் கவிகையின்னிழலில் பவனிவரும் அரச வாழ்வும் நிலையின்றியழியும் என கிலேயாமை கிலையை அறிவுறுத்தி நம் மன்னர்பிாான் கூறியுள்ளபடி இவையும் மன்னி வந்துள்ளன காண்க. மொழிப்பொருள்களைத் தனித்தனியே துணித்துணர்ந்து கொள்க. இறுதியிலுள்ள ஆசிரியமாலையில் கருத்துக்களை விளக்கி யிருக்குங் திறம் கருதுந் தோறும் மகிழ்ச்சி மீக்கூர்கின்றது. உள்ளுணர்ச்சிகளை மொழிவழியே நம் நாட்டுக்கவிகள் வெளியே துலக்கியிருக்கும் நயங்கள் வியத்தகு கலைகளாய் விளங்கி கிற்கின் றன. பாவின் நயம் பயிலப் பயிலப் பாவி மேலெழும் ஆகலால் பாக்களைப் பலமுறையும் காமாகவே பயின்று நோக்கவேண்டும். கவியின் சுவையான் அவியுஞ் சுவையான் என்ற கல்ை கவிச் சுவையாளரின் உணர்ச்சி நலனும் உயர்ச்சி நிலையும் உணரலாகும். எச்சில் என்றது இகழ்ச்சிக் குறிப்புடன் இளித்துரைத் சதாம். உண்டவற்றையே மீண்டும் மீண்டும் உண்டு மேல்நோக்கம் ஒன்று மின்றி உழன்று வருதலால் உலக போகங்கள் எச்சில் என வங்தன.

உண்ட இன்பமே மீளவும் உண்கின்றது, ஒருநாள் கண்ட காட்சியே மீளவும் காண்கின்றது, உவந்து கொண்ட கோலமே மீளவும் கொள்கின்றது, என்றால் விண்ட மேலவர் நானுரு தொழிவரோ வெறுத்து.’

(ஞானவாசிட்டம்)

இது மாவலி மன்னன் உரைத்தது. மேலவர் நாணி வெறுத்து விரைந்து கறந்த போவர் என்ற கல்ை வெட்கமும் வெறுப்பு மின்றி விடய சுகங்களை நச்சி நிற்பவர் எச்சிலை நக்கும் ஈனங் ஆ விTTஆ ஞானக் கண்ணுடை யாரால் நாளும் இகழ்ந்து எண்ணப்

படுவர் என்பது பெற்றாம்.

‘ அரியது துறவறம் அல்லதில்ல யான் மருவிய துறவறம் ஒருவி மன்னய்ை உருகெழு முடிகவித் துலகம் ஆள்வது பெருவிலே மணியினைப் பிண்டிக் வேதே

என முன்னெரு மன்னன் சொன்னதும் ஈண்டெண்ணத் தக்கது. சக்கரவர்த்தி ஆகலால் கச்சையங்கடகரி முதலிய உச்சநிலைகளைக் குறித்து இவ்வாறு உரையாடலானன்.