பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 கம்பன் கலை நிலை

தும் கொடுத்துயருழந்தது; அயோத்தி நகரம் ஆவிபோன உடல்போல் அலமத்து கிடந்தது. வசிட்டர் எழுதியனுப்பிய ஒலையைக் கண்டு கேகய தேசத்திலிருந்து பாதன் வந்தான் ; உற்றதை அறிக் தான்; உள்ளம் துடித்தான்; பெற்ற தாயை வைது பெருஞ் சினங்கொண்டான். பின்பு இராமனை அழைத்து வந்தாலன்றி நான் பிழைத்திாேன்’ என்று பெருந்துயர் மிகுந்து பரிவாாங் களுடன் வனம் புகுந்து வழியறிந்து போய் அண்ணனைக் கண்டு அடிவிழுங்கழுது அலறி கின்றான்; அவ்வண்ணலும் கம்பியை ஆற்றிக்கேற்றின்ை. கேற்றியும் கேருமல் கேம்பி அழுது நகரம் வந்தருளும்படி பரதன் நயந்து வேண்டினன். இராமன் அவனைக் கண்ணீர் துடைத்து ஆசத்தழுவி ஆறுதல் கூறிக் கம்பி! தந்தை காயர் சொல்லிய எல்லைமீறலாகாது ; பதின்ைகு வருடம் கழிக்க வுடன் வந்து சேருவேன்; என் வாய்மொழி தட்டாமல் நீ போ யருள்க’ என்று புகன் றருளினன். அதன் பின் வேறு கூற வழி யின்றி இராமனது பாதுகையை வாங்கித் தலையில் வைத்துக் கொண்டு உலமெழுகுபோல் உருகிப் பாகன் மீண்டு அயோத்தி அருகேயுள்ள நந்தியம்பதியை அடைந்தான். அங்கே அந்தியும் பகலும் நீர் அருக கண்ணனுய் அண்ணனேயே எண்ணி அருங் தவ கிலையில் அமர்ந்திருந்தான். இராமன் அங்கிருந்தகன்று

தென் திசை வந்தான்.

3. ஆ1 னிய காண்டம்

சித்திாகூடம் விட்டெழுந்த இராமன் அத்திரி முனிவர் ஆச்சிரமத்தை யடைந்தான். அம்மாதவர் ஆதரித்தருள அங்கே ஒரு நாள் கங்கினன். அம்முனிவர் பத்தினியாகிய அங்குயை சீதையை ஆசீர்வதித்து அணிகள் பல கங்காள். மறுநாள் அவ ரிடம் விடைபெற்று இராமன் அங்கிருந்தெழுத்து தென் கிசை வருங்கால் இடையே இடையூறு புரிந்த விராகனக்கொன்று சாப அருள்புரிந்து, சாபங்கரைப் பிரிந்து, சுதீக்கண்ணாைக் கண்டு, பின்பு அகத்தியரையடைந்து, அடிபணிந்து கின்றான். அவர் இராமனே உவந்துபசரித்து அரிய வில் ஒன்று கந்தார். அவரை வாழ்த்தி யகன்று இடையே சடாயுவைக் கண்டு உறவு நிலை தெரிந்து உளமிக மகிழ்ந்து முடிவில் கோதாவரி நதியருகே பஞ்ச வடி என்னும் இடத்தை யடைந்து அங்கே பன்னசாலைஅம்ைத்து மனைவியும் தம்பியும் பணிசெய்து வர இராமன் இனிதமர்ந்திருக்